நீயா நானா போட்டியாக யாழில் நாளை தனி தனி கூட்டங்களை நடாத்தும் ரெலோ - தர்மசங்கட நிலையில் உறுப்பினர்கள் - Yarl Voice நீயா நானா போட்டியாக யாழில் நாளை தனி தனி கூட்டங்களை நடாத்தும் ரெலோ - தர்மசங்கட நிலையில் உறுப்பினர்கள் - Yarl Voice

நீயா நானா போட்டியாக யாழில் நாளை தனி தனி கூட்டங்களை நடாத்தும் ரெலோ - தர்மசங்கட நிலையில் உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் கூட்டமொன்று அக் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையல் யாழில் நாளை இடம்பெறவுள்ளது. அதே நேரத்தில் கட்சியில் இருந்து வெளியேறியுள்ள கட்சியின் செயலாளர் நாயகம் சிறிக்காந்தாவின் தலைமையிலும் ஒரு கூட்டம் நாளை நடக்க உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தவிசாளராக இருந்த சிவாஐpலிங்கம் ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதால் கட்சியிலிருந்து இடைநிறுததப்பட்டார். அதே நேரத்தில் சிவாஐpலிங்கத்திற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி கட்சியின் செயலாளரான சிறிகாந்தாவும் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் ரெலோவின் செயற்பாடுகளில் அதிருப்தி இருப்பதாகவும் இனிமேலும் தொடர்ந்து அந்தக் கட்சியில் பயணிக்க முடியாது எனத் தெரிவித்து சிறிகாந்தா தலைமையிலான ரெலோவின் ஒரு பகுதியினர் அக் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ரெலோவின் யாழ் மாவட்டக் குழுக் கூட்டம் யாழ் நாவலர் மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக் கிழமை  நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமா விந்தன் கனகரத்தினம் மேற்கொண்டு வருகின்றார்.

இதே வேளையில் சிறிகாந்தா உருவாக்கும் புதிய கட்சி தொடர்பில் நாளையதினம் விசேட கூட்டமொன்றும் யாழில் நடக்க இருக்கின்றது. ஆக மொத்தத்தில் இரு பரிவுகளாக பிளவுபட்டிருக்கின்ற ரெலோ அமைப்பு அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண ரெலோ சபாஸ் சரியான போட்டி என்ற வகையில் ஏட்டிக்குப் போட்டியாக இரு தரப்பும் நாளையதினம் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

இதனால் யாழ்ப்பாணத்திலுள்ள ரெலோ உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் பெரும் குழப்பத்திற்குள்ளாகயிருக்கின்றனர். ஏனெனில் இங்குள்ள பலரும் சிறிகாந்தாவின் ஆதரவுடன் தான் அரசியலுக்கு வந்திருந்தனர். இதனால் சிறிகாந்தாவை பகைக்க முடியாத நிலைமை அவர்களுக்கு இருக்கிறது.

அதே நேரத்தில் அரசியலில் குறிப்பாக உள்ளுராட்சி சபைகளில் உறுப்பினர்களாக தவிசாளர்களாக பிரதி தவிசாளர்களாக உள்ளவர்கள் செல்வம் தலைமையிலான ரெலோவுடன் இணைந்து செயற்படாவிட்டால் தமது பதவிகள் பறிபோய்விடுமென்ற அச்சத்தில் இருக்கின்றனர்.

ஆகiயினால் செல்வம் தலைமையிலான ரெலோவுடனும் சிறிகாந்தா தலைமையிலான அணியுடனும் யார் யார் இறுதியில் இணைந்து கொள்கின்றார்கள் என்பது நாளையதினம் தெரிய வருமென்று எதிர்பார்க்கலாம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post