ஆனசப் பங்கீடுகளில் கூட்டமைப்பு போன்று மாற்று அணிக்குள்ளும் குழப்பம்? சங்கடத்தில் சம்மந்தன் விக்கினேஸ்வரன் - Yarl Voice ஆனசப் பங்கீடுகளில் கூட்டமைப்பு போன்று மாற்று அணிக்குள்ளும் குழப்பம்? சங்கடத்தில் சம்மந்தன் விக்கினேஸ்வரன் - Yarl Voice

ஆனசப் பங்கீடுகளில் கூட்டமைப்பு போன்று மாற்று அணிக்குள்ளும் குழப்பம்? சங்கடத்தில் சம்மந்தன் விக்கினேஸ்வரன்முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான மாற்று அணி உருவாக்கும் முயற்சிகள் இறுதுpகட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


துமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற பங்காளிக் கட்சிகள் மற்றுமு; கூட்டமைப்பிலிருந்த வெளியேறியவர்கள் இணைந்து கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியொன்றை உருவாக்கும் முயற்சிகளில் சில காலமாக ஈடுபட்டு வந்தனர்.

குறிப்பாக முன்னாள் வட மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சீ.வீ. விக்கினேஸ்வரன் தலைமையில் இந்த மாற்று அணியை உருவாக்கப் போவதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் கட்சிகளுக்கு இடையிலான பேச்சுக்கள் முடிவடைந்து ஆசனப் பங்கீடுகளும் ஓரளவிற்கு மடிவிற்கு வந்துள்ளன. இதனையடுத்து மிக விரைவில் அதாவது இன்னுமு; சில வாரங்களில் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு கூட்டணி தொடர்பான உத்தியோகபூர்வ முடிவுகளும் அறிவிக்கப்பட இருக்கின்றது.

இந்தக் கூட்டணியில் முன்னாள் முதலமைச்சரின் தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, சிறிகாந்தாவின் தமிழ்த் தேசியக் கட்சி, அனந்தி சசிதரனின் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகளும் பொது அமைப்புக்களும் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதே வேளையில் இந்தக் கூட்டணி உருவாக்கத்திலும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடுகள் தொடர்பிலும் சில முரண்பாடுகள் இருப்பதாகவும் தெரிய வருகிறது. ஆனாலும் மிக விரைவில் கூட்டணி தொடர்பாக அறிவிப்புக்கள் வருமென இந்த முயற்சிகளில் ஈடுபட்ட வருகின்ற முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளுக்கு இடையிலும் இதே போன்று ஆசனப் பங்கீடு தொடர்பில் பல முரண்பாடுகள் இருந்து வருகின்ற நிலையில் அது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post