தமிழ் மக்களின் நம்பிக்கை பொறுப்பு' நிதியத்தினூடாக விக்னேஸ்வரனால் நிவாரணப் பொதிகள் வழங்கிவைப்பு! - Yarl Voice தமிழ் மக்களின் நம்பிக்கை பொறுப்பு' நிதியத்தினூடாக விக்னேஸ்வரனால் நிவாரணப் பொதிகள் வழங்கிவைப்பு! - Yarl Voice

தமிழ் மக்களின் நம்பிக்கை பொறுப்பு' நிதியத்தினூடாக விக்னேஸ்வரனால் நிவாரணப் பொதிகள் வழங்கிவைப்பு!


லண்டன் ஸ்ரீ கனக துர்கை அம்மன் ஆலயத்தின் அனுசரனையுடன் தமிழ் மக்கள் கூட்டணியின் 'தமிழ் மக்களின் நம்பிக்கை பொறுப்பு' நிதியத்தினூடாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு பகுதி மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மருதங்கேணி பிரதேச செயலக தரப்பினரால் தெரிவு செய்யப்பட்ட 156 குடும்பங்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் நிவாரணப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகளை இன்று வழங்கிவைத்துள்ளார்.

மணல்காடுஇ குடத்தனை நாகர்கோவில் செம்பியன்பற்று மாமுணை மருதங்கேணி மற்றும்  வெற்றிலைக்கேணி உள்ளிட்ட கிராமங்களில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட மக்களில் பாதிப்பின் அடிப்படையில் குறித்த பகுதிகளைச் சேர்ந்த கிராம சேவகர்களால் தெரிவு செய்யப்பட்டிருந்த 156 குடும்பங்களுக்கு 2இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் பொதிசெய்யப்பட்டு இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க் கிழமை காலை 11.00 மணியளவில் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் வைத்து இவ்வாறு வழங்கப்பட்ட நிவாரண பொருட்களை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் கொள்கை பரப்பு செயலாளர் க.அருந்தவபாலன் கட்சியின் பொருளாளர் வி.பி.சிவநாதன் உள்ளிட்ட கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களும் வருகைதந்து வழங்கி வைத்திருந்தனர்.

தாயகத்திலுள்ள உறவுகளுக்கு உதவிசெய்ய விரும்பும் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களின் உதவிகளை சட்ட ரீதியாக மேற்கொள்வதற்கு ஏதுவாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் அவர்களது எண்ணக்கருவிற்கு அமைவாக 'தமிழ் மக்களின் நம்பிக்கை பொறுப்பு' நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் வணக்கத்துக்குரிய இமானுவேல் இரவிச்சந்திரன் சிவஸ்ரீ சபாரட்ணசர்மா வாசுதேவசர்மா  பேராசிரியர் ஏ.P.சிவநாதன் ஓய்வு நிலை அதிபர் க.அருந்தவபாலன் வைத்தியகலாநிதி சி.சிவன்சுதன் சட்டத்தரணி திருமதி.சு.சிவரூபவதி கட்டடக்கலைஞர் த.சிற்பரன் மற்றும் ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர் .க.இராஜதுரை ஆகியோரின் அங்கத்துவத்துடன் ஆரம்பிக்கப்பட்ட 'தமிழ் மக்களின் நம்பிக்கை பொறுப்பு' நிதியத்தின் முதலாவது உதவித் திட்ட நிகழ்வாக இந்நிகழ்வு இலண்டன் ஸ்ரீ கனக துர்கை அம்மன் ஆலயத்தின் அனுசரனையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post