இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - Yarl Voice இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - Yarl Voice

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு


இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகியவற்றுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வரும் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. 2020-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை 3 டி20 போட்டிகளில் இலங்கை அணி விளையாடுகிறது. அதன்பின் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ஆஸ்திரேலிய அணியுடன் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.

இதில் இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி ஜனவரி 5-ம் தேதி குவாஹாட்டியிலும்இ 7-ம் தேதி இந்தூரில் 2-வது போட்டியும்இ 9-ம் தேதி புனேவில் 3-வது டி20 போட்டியும் நடக்கிறது.

அதேபோல இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி ஜனவரி 14-ம் தேதி மும்பையில் முதல் ஒருநாள் போட்டியில் மோதுகிறது. அதன்பின் இரு அணிகளும் 17-ம் தேதி ராஜ்கோட்டில் 2-வது போட்டியில் விளையாடுகின்றன. 3-வது மற்றும் கடைசிப் போட்டி 19-ம் தேதி பெங்களூருவில் நடக்கிறது.

இந்தப் போட்டித் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே. பிரசாத் தலைமையில் தேர்வு செய்யப்பட்டது.

இதில் காயத்தில் இருந்து மீண்டு உடல் தகுதியுடன் இருக்கும் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் முழங்கால் காயத்தில் இருந்து குணமடைந்து திரும்பிய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவணும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

அதேசமயம் தொடர்ச்சியாக விளையாடிவரும் துணைக் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆஸிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேதார் ஜாதவைத் தேர்வு செய்து மீண்டும் தேர்வுக்குழுவினர் அதிர்ச்சியளித்துள்ளனர். மயங்க் அகர்வால் இரு தொடருக்கும் தேர்வு செய்யப்படவில்லை. இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கு மட்டும் சஞ்சு சாம்ஸன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை ஒருபோட்டியில் கூட விளையாடுவதற்கு வாய்ப்பு தராமல் தொடர்ந்து ஓய்விலேயே சாம்ஸன் வைக்கப்பட்டு வரும் சூழலில் மீண்டும் சாம்ஸன் தேர்வு ஏன் எனத் தெரியவில்லை.

இலங்கை தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்) ஷிகர் தவண் கே.எல். ராகுல் ஸ்ரேயாஸ் அய்யர் ரிஷப் பந்த் ரவிந்திர ஜடேஜா ஷிவம் துபே யஜுவேந்திர சாஹல் குல்தீப் யாதவ் ஜஸ்பிரித் பும்ரா நவ்தீப் ஷைனி ஷர்துல் தாக்கூர் மணிஷ் பாண்டே வாஷிங்டன் சுந்தர் சஞ்சு சாம்ஸன்.

ஆஸி. (ஒருநாள் தொடர்) தொடருக்கான இந்திய அணி

விராட் கோலி (கேப்டன்) ஷிகர் தவண் ரோஹித் சர்மா கே.எல்.ராகுல ஸ்ரேயோஸ் அய்யர் மணிஷ் பாண்டே ரிஷப் பந்த் கேதார் ஜாதவ் ஷிவம் துபே ரவிந்திர ஜடேஜா குல்தீப் யாதவ் யஜுவேந்திர சாஹல் நவ்தீப் ஷைனி ஷர்துல் தாக்கீர் ஜஸ்பிரித் பும்ரா.

0/Post a Comment/Comments

Previous Post Next Post