சீரற்ற கால நிலையால் நோய்கள் பரவும் அபாயம் - பொது மக்களுக்கு எச்சரிக்கை - Yarl Voice சீரற்ற கால நிலையால் நோய்கள் பரவும் அபாயம் - பொது மக்களுக்கு எச்சரிக்கை - Yarl Voice

சீரற்ற கால நிலையால் நோய்கள் பரவும் அபாயம் - பொது மக்களுக்கு எச்சரிக்கை


இலங்கையின் பல பாகங்களில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.

இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் பலர் தமது தங்குமிடங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டின் பல இடங்களில் ஒரு வகையான காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருமல் வயிற்றுவலி தலைவலி உடல் சோர்வு போன்றவையே அந்த காய்ச்சலின் அறிகுறிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை தொற்று நோய்கள் ஒழிப்பு பிரிவின் தொற்று நோய்கள் தொடர்பான பிரதான வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இவ்வாறான அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post