தர்பார் இசை வெளியீட்டு திகதி அறிவிப்பு - Yarl Voice தர்பார் இசை வெளியீட்டு திகதி அறிவிப்பு - Yarl Voice

தர்பார் இசை வெளியீட்டு திகதி அறிவிப்பு


லைக்காவின் பிரமாண்ட தயாரிப்பில் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில்இ இப்படத்தின் இசை  இம் மாதம் 7 ஆம் திகதி நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5 மணி முதல் பிரமாண்டமாய் நடைபெறவுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைக்கா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

'சும்மா கிழி' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில்இ 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்தில் தீம் மியூசிக்குடன் கூடிய தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து 'தர்பார்' அசத்தல் இசையில் இருந்து முதல் சிங்கிள் டிராக்கான 'சும்மா கிழி' பாடல்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இப்பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

'பேட்ட' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'தர்பார்' திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.

இவர்களுடன் யோகிபாபு ஜட்டின் சர்னா பிரதீப் கப்ரா நிவேதா தாமஸ் பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

'பேட்ட' திரைப்படத்திற்கு பின் மீண்டும் அனிருத் 'தர்பார்' திரைப்படத்தில் இணைந்துள்ளார். தளபதி திரைப்படத்திற்கு பின் மீண்டும் சந்தோஷ் சிவன் இந்த படத்தின் ஒளிப்பதிவாளாராகியுள்ளார்.

இத்திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு சும்மா கிழி கிழி என திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post