யாழில் பொலஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 38 பேர் கைது - Yarl Voice யாழில் பொலஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 38 பேர் கைது - Yarl Voice

யாழில் பொலஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 38 பேர் கைது

யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பொலிஸாரினால் 38 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

பொலிஸ் மா அதிபரின் அறிவித்தலுக்கு அமைய நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு தேடுதல்களை நேற்று முன்தினம் இடம்பெற்றது.அந்த வகையில் யாழ்ப்பாணத்திலும் சுற்றி வலைப்பு மேற்கொள்ளப்பட்டது.இந்த சுற்றிவளைப்பு தேடுதலின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பின் போது மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையில் 19 சந்தேகத்திற்குரிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள தன் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 12 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறு குற்றங்கள் புரிந்த ஐந்து சந்தேகநபர்கள் என மொத்தமாக 38 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட போலீசார் குறித்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீது சட்டநடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
--

0/Post a Comment/Comments

Previous Post Next Post