தாமோதரம்பிள்ளையின் நினைவாலயத் திறப்புவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் - Yarl Voice தாமோதரம்பிள்ளையின் நினைவாலயத் திறப்புவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் - Yarl Voice

தாமோதரம்பிள்ளையின் நினைவாலயத் திறப்புவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும்


சி.வை.தாமோதரம்பிள்ளையின் 120 ஆம் ஆண்டு நினைவாலய திறப்பு விழாவும் பரிசளிப்பு விழாவும் யாழ் ஏழாலை மகா வித்தியாலயத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது.

குறித்த வித்தியாலயத்தின் அதிபர் வே.உதயமோகன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக விகாமம் தெற்கு பிரதேச செயலர் சிவராஐசிங்கம் nஐயகாந்த் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நினைவாலயத்தை திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சுன்னாகம் மக்கள் வங்கி முகாமையாளர் சிவசிதம்பரப்பிள்ளை மோகனச் செல்வன், யாழ் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீட விரிவுரையாளர் தி.செந்தில்வமனோகரன், வைத்திய காலாநிதி தணிகாசலம் தீலீபன், யாழ் கோப்பாய் பல்வியற் கல்லூரி ஓய்வுநிலை விரிவுரையாளர் முருகேசு கௌரிகாந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள். பொது மக்கள், எனப் பல்வெறு தரப்பினர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது கலை நிகழ:வுகளும் இடம்பெற்றிருந்தன. மேலும் சமூகத்தில் சேவைகளை ஆற்றி வருகின்ற பல்வேறு தரப்பினர்களும் இதன் போது பொன்னாடை போர்த்தி மாலை அணிவிக்கப்பட்டு கேடயங்களுகம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   


0/Post a Comment/Comments

Previous Post Next Post