வயல் காணிக்குள் ஆடு கட்ட சென்ற குடும்பப் பெண் சடலமாக மீட்பு - Yarl Voice வயல் காணிக்குள் ஆடு கட்ட சென்ற குடும்பப் பெண் சடலமாக மீட்பு - Yarl Voice

வயல் காணிக்குள் ஆடு கட்ட சென்ற குடும்பப் பெண் சடலமாக மீட்பு

வயல் காணிக்குள் ஆடு கட்ட சென்ற குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தில் வாதரவத்தை புத்தூரை சேர்ந்த செல்வராசா ஈஸ்வரி(வயது 52) என்ற 6 பிள்ளைகளின் தாயே சடலமாக மீட்கப்ஜபட்டுளளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

யாழ்ப்பாணம் புத்தூரை சேர்ந்த குறித்த குடும்பப் பெண் நேற்று  தனது வீட்டில் இருந்து வயல் காணி ஒன்றில் ஆடு கட்டுவதற்கு சென்றுள்ளார்.இரவு நேரேமாகியும் ஆடு கட்ட சென்றவரை காணவில்லை என வீட்டில் இருந்தவர்கள் தேடியுள்ளனர்.

குடும்பத்தினர் வயலுக்கு சென்று பார்வையிடட போது குறித்த குடும்பப் பெண் வீழ்ந்து கிடந்துள்ளார்.உடனடியாக அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கனவே இறந்துவிட்ட்தாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்

.இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிரேம்குமார் மேற்கொண்டார்.
--

0/Post a Comment/Comments

Previous Post Next Post