மதுபோதையில் வாகனம் செலுத்திய அரச பேருந்து சாரதிக்கு அமைச்சர் வழங்கிய உத்தரவு - Yarl Voice மதுபோதையில் வாகனம் செலுத்திய அரச பேருந்து சாரதிக்கு அமைச்சர் வழங்கிய உத்தரவு - Yarl Voice

மதுபோதையில் வாகனம் செலுத்திய அரச பேருந்து சாரதிக்கு அமைச்சர் வழங்கிய உத்தரவு

யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் பேருந்தை செலுத்திய சாரதியை உடனடியாக பணியிலிருந்து இடைநிறுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு சென்ற பேருந்து கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நாவற்குழியில் நடத்தப்பட்ட சோதனையில் சாரதி மதுபோதையில் இருப்பது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன் சாரதியின் ஆசனத்தின் கீழ் பை ஒன்றிலிருந்து பியர் மற்றும் மது போத்தல் என்பன மீட்கப்பட்டன.

இந்தநிலையிலேயே அவரை பணியிலிருந்து உடனடியாக இடைநிறுத்துமாறு அமைச்சர் மகிந்த அமரவீர போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post