ரஜினியின் அந்தப் படத்தை ரீமேக் செய்ய ஆசை - நடிகர் தனுஷ் - Yarl Voice ரஜினியின் அந்தப் படத்தை ரீமேக் செய்ய ஆசை - நடிகர் தனுஷ் - Yarl Voice

ரஜினியின் அந்தப் படத்தை ரீமேக் செய்ய ஆசை - நடிகர் தனுஷ்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தனுஷ் ரஜினியின் அந்த படத்தை ரீமேக் செய்ய ஆசை என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

துள்ளுவதோ இளமை படம் மூலம் திரையுலகில் அறிமுகமான தனுஷ் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்தார்.

இவர் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது வென்றார். இவர் கோலிவுட் படங்களில் மட்டுமல்லாது பாலிவுட் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் வருகிற 15-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் சமீபத்திய பேட்டியில் 30 வருடங்களுக்கு முன்பு ரஜினி நடித்த படத்தை ரீமேக் செய்ய ஆசை என தெரிவித்துள்ளார்.

ரஜினி நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்த நெற்றிக்கண் படத்தினை தான் ரீமேக் செய்ய தனுசுக்கு ஆசையாம். நெகடிவ் வேடத்தில் நடித்தால் மக்கள் வெறுப்பார்கள் ஆனால் ரஜினியின் இந்த பிளேபாய் ரோலை அனைவரும் ரசித்தார்கள் என கூறியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post