நயன்தாரவுடன் மீண்டும் இணைந்த பிகில் பட நடிகை - Yarl Voice நயன்தாரவுடன் மீண்டும் இணைந்த பிகில் பட நடிகை - Yarl Voice

நயன்தாரவுடன் மீண்டும் இணைந்த பிகில் பட நடிகை

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தற்போது நடித்து வரும் படத்தில் பிகில் பட நடிகை ஒருவர் இணைந்து நடித்துள்ளார்.

ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடித்து வெளியான 'எல்.கே.ஜி' படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் கதை திரைக்கதையை தனது நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கினார் ஆர்ஜே பாலாஜி.

இந்த படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்த படத்தையும் தங்களுக்கே செய்யுமாறு அவருக்கு அட்வான்ஸ் கொடுத்தது.

எனவேஇ புதிய படத்துக்கான கதையையும் தனது நண்பர்களுடன் சேர்ந்து எழுதிய ஆர்ஜே பாலாஜி அதில் அவரே நாயகனாக நடித்து இயக்கி வருகிறார்.

 அவரோடு இணைந்து என்.ஜே.சரவணனும் இயக்குநர் பொறுப்பை கவனிக்கிறார். இவர்கள் இருவருமே 'எல்.கே.ஜி.' படத்தில் முதல்நிலை உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்கள்.

 'மூக்குத்தி அம்மன்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்கதையும் அவர் மீது பயணிப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்துஜா இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாகர்கோவிலில் நடந்த படப்பிடிப்பில் நடித்த இந்துஜா தனக்கான காட்சிகளில் நடித்து முடித்து சென்னை திரும்பியுள்ளார்.

நயன்தாராவும் இந்துஜாவும் ஏற்கெனவே 'பிகில்' படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. 'மூக்குத்தி அம்மன்' படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post