ரஜினியின் அடுத்த படத்திலும் இணையும் நயன்தாரா - Yarl Voice ரஜினியின் அடுத்த படத்திலும் இணையும் நயன்தாரா - Yarl Voice

ரஜினியின் அடுத்த படத்திலும் இணையும் நயன்தாராதர்பார் படத்தை அடுத்து ரஜினி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் 'தர்பார்' திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். தற்போது மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

தர்பார் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வருகிறார். தலைவர் 168 என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தில் மீனா குஷ்பு கீர்த்தி சுரேஷ் சதீஷ் சூரி பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தில் நயன்தாரா இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post