இந்திய மீனவர்கள் நான்கு பேர் கைது - கடற்படை தம்மை தாக்கி படகையும் மூழ்கடித்ததாக மீனவர்கள் வருத்தம் - Yarl Voice இந்திய மீனவர்கள் நான்கு பேர் கைது - கடற்படை தம்மை தாக்கி படகையும் மூழ்கடித்ததாக மீனவர்கள் வருத்தம் - Yarl Voice

இந்திய மீனவர்கள் நான்கு பேர் கைது - கடற்படை தம்மை தாக்கி படகையும் மூழ்கடித்ததாக மீனவர்கள் வருத்தம்

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் nnஐகதாப்பட்டனத்தைச் சேந்ர்த பாரதிஇ சசிகுமார்இ மணிஇ அசோக்குமார் ஆகிய நான்கு மீனவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் நெடுந்தீவுக் கடற்பரப்பினருகே நேற்று இரவு தொழில் ஈடுபட்டிருந்த நிலையில் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினர் கைது செய்த காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்ட சென்றனர்.

இந் நிலையில் இன்று மாலை யாழ் பண்ணையிலுள்ள நீரியல் வளத் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்ட குறித்த நான்கு மீனவர்களும் அங்கு பதிவுகளை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளை நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை இலங்கை கடற்படையினர் தம்மைத் தாக்கி தமது படகையும் கடலுக்குள் மூழ்கடித்தே தம்மைக் கைது செய்துள்ளதாக இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0/Post a Comment/Comments

Previous Post Next Post