தமிழரசுக் கட்சியின் செயற்பாடே கூட்டமைப்பிற்குள் பிளவை ஏற்படுத்தியது, ஒற்றுமைக்கான அழைப்பு என்பது சுடலை ஞானம் - ஐங்கரநேசன் குற்றச்சாட்டு - Yarl Voice தமிழரசுக் கட்சியின் செயற்பாடே கூட்டமைப்பிற்குள் பிளவை ஏற்படுத்தியது, ஒற்றுமைக்கான அழைப்பு என்பது சுடலை ஞானம் - ஐங்கரநேசன் குற்றச்சாட்டு - Yarl Voice

தமிழரசுக் கட்சியின் செயற்பாடே கூட்டமைப்பிற்குள் பிளவை ஏற்படுத்தியது, ஒற்றுமைக்கான அழைப்பு என்பது சுடலை ஞானம் - ஐங்கரநேசன் குற்றச்சாட்டு


தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளே கூட்டமைப்பின் பிளவுகளுக்கு காரணமாக அமைவதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வட மாகாண அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் கூட்டமைப்பு விடுத்துள்ள ஒற்றுமைக்கான அழைப்பு என்பது சுடலை ஞானம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியற் சூழலில் புதிது புதிதாகப் பல கட்சிகள் உருவாகின்றமை மற்றும் கூட்டமைப்பு விடுத்துள்ள ஒற்றுமையக்கான அழைப்பு தொடர்பில் தெரிவிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..

தமிழ் மக்கள் ஓரணியில் திகழ வேண்டியதன் அவசியத்தை நான் உணருகின்றேன். ஆனால் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் ஒற்றுமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து வெற்றி பெற வைத்தார்கள்.

ஆனால் இந்த வாக்குப் பலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் வென்றெடுப்பதற்கான முயற்சியில் சாதகமாகப் பயன்படுத்தவில்லை. மாறாக சர்வதேச அரங்கில் யுத்தக் குற்றங்களில் இருந்து அரசாங்கத்தை பிணையெடுக்கும் விதமாகவே நடந்து கொண்டார்கள்.

வெளிப்படையாகச் சொல்வதானால் யாழ் மாவட்டத்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஐயகலா அம்மையார் அளவிற்கு அல்லது அவரிலும் மேலாக ஐக்கிய தேசியக் கட்சியையும் ரணில் விக்கிரமசிங்க அவர்களையும் விசுவாசித்தார்கள். இங்கு தமிழ் மக்களின் வாக்குப்பலம் அவர்களுக்கான வெற்றியைப் பெற்றுத் தரவில்லை.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழரசுக் கட்சியினரின் ஏகபோகமே இதற்கான காரணம். ஆகவே யுத்தத்திற்குப் பின்னரான இந்த நிலைமாறுகால அரசியற் சூழலில் ஏகபோகமாக ஒரு கட்சிக்கு வாக்குப்பலத்தை வழங்குவதை விட தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுருதி கொண்ட பலரையும் வெற்றி பெறவைத்து அந்த பண்மைத்துவத்தினூடாக ஒற்றுமையைப் பேணுவதே பொருத்தமாக அமையும் என்பது எனது நிலைப்பாடாகும். இங்கு தனித்த ஒரு கட்சியின் ஏகபோகமும் அதனால் நேரக் கூடிய அபாயங்களும் இல்லாமல் போகும்.

மேலும் தமிழ்க் கட்சிகளைப் பிரிந்து நிற்காமல் தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட;டமைப்பு விடுக்கும் அழைப்பு என்பது சுடலை ஞானம். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் நிழல் அமைச்சர்களாகத் தொழிற்பட்டதன் பயனாக மக்கள் மத்தியில் இழந்து போன செல்வாக்கால் தேர்தல் தோல்விப் பயம் அவர்களுக்கு வந்து விட்டது. அதனாலேயே இப்போது போலியாக ஒற்றுமை குறித்தப் பேசுவுகின்றார்கள். இன்று கூடு;டமைப்பிற்கு எதிராக அரசியற் கனளத்தில் நிற்கும் பலரும் கூட்டமைப்பில் இருந்த பிரிந்து வந்தவர்கள் தான்.

இப்போது கதவுகள் திறந்திருக்கின்றன உள்ளே வா என்கிறார்கள். தமிழரசுக் கட்சி பெரியண்ணண் மனோபாவத்துடன் நடந்து கொள்ளாமல் கூட்டமைப்பில் இணைந்திருந்த சகல கட்சிகளையும் சம அந்தஸ்துடன் நோக்கியிருக்குமாக இருந்தால் இந்தப் பிளவு வந்திராது. இவர்கள் இப்போது பேசுகின்ற ஒற்றுமை உதட்டளவினாது மாத்திரமே.

0/Post a Comment/Comments

Previous Post Next Post