வடமராட்சியில் காணாமல் போயிருந்த சிறுவர்கள் மூவரும் கண்டுபிடிக்கப்பட்டனர் - Yarl Voice வடமராட்சியில் காணாமல் போயிருந்த சிறுவர்கள் மூவரும் கண்டுபிடிக்கப்பட்டனர் - Yarl Voice

வடமராட்சியில் காணாமல் போயிருந்த சிறுவர்கள் மூவரும் கண்டுபிடிக்கப்பட்டனர்


வடமராட்சி கிழக்கில் காணமல் போயிருந்த மூன்று சிறுவர்களும் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பத்துவயதுடைய இரண்டு சிறுவர்களும் 17 வயதுடைய சிறுவர் ஒருவருமாக மூன்று சிறுவர்கள் நேற்றையதினம் காணாமல் போயிருந்தனர். பல இடங்களிலும் தேடியும் காணவில்லை.

இதனையடுத்து பருத்தித்துறைப் பொலிஸாருக்கு அறிவி;க்கப்பட்டு பொலிஸாரும் ஊர் மக்களும் இணைந்து நேற்று பல இடங்களிலும் தேடுதல் நடத்தியிருந்தனர்.

ஆயினும் காணாமல் போன சிறுவர்கள் யாரும் மீட்கப்படவில்லை. இதனால் அப் பகுதுpயில் பெரும் பரபரப்பொன்று ஏற்பட்டிருந்தது.

இந் நிலையில் தேடுதலை நேற்று மாலை ஆரம்பித்த ஊர் மக்கள் தொடர்ந்தும் தேடிக் கொண்டிருந்த நிலையில் அங்கு ஆலயம் ஒன்றிலுள்ள மடத்தில் இந்த சிறுவர்கள் மூவரும் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post