அரச நிர்வாக சேவையில் துணிவாக சிற்நத முறையில் செயற்பட்ட ஒருவரே வடக்கு மாகாண ஆளுநராக வந்திருக்கின்றார். அவ்வாறு வடக்கில் துணிவுடன் சிறந்த சேவையை முன்னெடுக்கக் கூடியவர் என்ற நப்பிக்கையின் அடிப்படையிலையே ஐனாதிபதியும் அவரை நியமித்திருக்கின்றார் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வடக்கில் சிறந்த முறையில் செயலாற்ற எங்களுடைய ஆதரவை நாங்களும் வழங்குவோம் என்றார்.
வடக்கு மாகாண புதிய ஆளுநராக நிமிக்கப்பட்டுள்ள திருமதி சாள்ஸ் யாழிலுள்ள வடக்கு ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளைப் பெறுப்பேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..
வடக்கிற்கு புதிதாக வந்திருக்கின்ற தற்போதைய ஆளுநர் அவர்களுடன் கடந்த 1994 ஆம் ஆண்டு தொடக்கம்; பழகக்க கூடிய சந்தர்ப்பம் எனக்கு இருந்தது. அப்போது நான் வன்னி மாவட்ட தலைவராக இருந்த காலத்தில் அவருடன் வேலை செய்யக் கூடிய சந்தர்ப்பத்தை நான் எடுத்திருந்தேன்.
அப்போது ஒரு விசயத்தை என்னால் பார்க்கக் கூடியதாக இருந்தது.
இன்றைக்கும் பலரும் அதைப்பற்றி கூறியிருந்தார்கள். மிகத் துணிந்த நேர்மையாக எந்த ஒரு விடயத்தை எடுத்துக் கொண்டாலும்; அதைச் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் கொண்டு அது எந்தப் பிரச்சனைகள் வந்தாலும் அதற்கு முகங்கொடுத்து அதைச் செய்து முடிக்கக் கூடிய ஒரு அதிகாரியாகவே நான் அவரைப் பார்த்திருக்கிறேன். அந்தளவிற்கு மிகச் சிறந்த சேவையான்.
இந்த நிலையில் அவர் ஆளுநராக வந்திருக்கிற போது அவருடன் நிர்வாக அதிகாரிகளாக இருந்தவர்களும் இன்று சேவையிலே இங்கு இருக்கிறார்கள். அது ஒரு நல்ல விசயமாக இருக்கலாமென்று தான் நான் கருதகின்றேன். ஏனென்றால் ஒருமிக்க அதாவது ஒன்றாக வேலை செய்தவர்கள் அதில் ஒருவர் ஆளுநர் அதே போல மற்றவர்கள் அதிகாரிகள் என ஒரு நட்புடன் வேலை செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.
ஐனாதிபதி அவர்கள் ஒரு அரச அதிகாரியை வேலையில் இருந்து விலக்கி அதாவது அவர் வகித்த அந்த அரச பதவியிலிருந்து எடுத்து இன்று ஒரு ஆளுநராக இங்கு அனுப்பியிருக்கிறார். ஐனாதிபதி அவ்வாறு செய்திருக்கின்றார் என்றால் இவரின் செயற்பாட்டில் அவருக்கும் அந்த நம்பிக்கை இருந்திருக்க வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன்.
எங்களுடைய மாகாணம் மிகப் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. மிக சிறந்த சேவையை இந்தப் பகுதிகளுக்கு எங்களுடைய வட மாகாணத்திற்கு கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அவ்வாறு செயற்படக் கூடிய ஒருவராக திருமதி சாள்ஸ் அமைகின்றார் என்ற நம்பிக்கையில் தான் ஐனாதிபதியும் அவரை இங்கு அனுப்பியிரக்கின்றார். அதையே நிச்சயமாக நாங்களும் என்னைப் பொறுத்தமட்டில் நான் நம்புகின்றேன்.
ஏனென்றால் முன்னைய காலத்தில் நாங்கள் அவருடன் வேலை செய்த போது அவர் மிக சிறப்பாக துணிவாச் செய்தததை பார்த்திருக்கிறேன். அந்த துணிவு தான் இங்கு மிக முக்கியமாக தேவைப்படுகிறது. ஏனென்றால் இன்றிருக்கின்ற கால கட்டத்திலே துணிவாகச் செயறடக் கூடியவர்கள் தேவை;. அரச அதிகாரிகளுடனும் இணைந்து செயற்பட வேண்டும்.
ஆகவே எமது மாகாணத்திற்கு அவ்வாறான சேவையை ஆளுநர் ஆற்றுவதற்கு நாங்களும் எங்களது ஒத்துழைப்பை வழங்குவோம். ஆகையினால் மாகாணத்திற்கான சேவைகளை புதிய ஆளுநர் செய்ய வேண்டும். அவ்வாறு நிச்சயமாகச் செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார்.
Post a Comment