ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காமலேயே பிரித்தானிய தூதுவர் கைது - Yarl Voice ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காமலேயே பிரித்தானிய தூதுவர் கைது - Yarl Voice

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காமலேயே பிரித்தானிய தூதுவர் கைது

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் கொல்லப்பட்ட 176 பேருக்கான நினைவிடத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக தெஹ்ரானுக்கான பிரித்தானிய தூதுவர் தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்இ 'நான் எந்த ஆர்ப்பாட்டங்களிலும் பங்கேற்கவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும்! பி.எஸ். 752 சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான விழிப்புணர்வாக இடம்பெற்ற ஒரு நிகழ்வுக்குச் சென்றேன்' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 'மக்கேர் அவர்களின் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 'மரியாதை செலுத்த விரும்புவது இயல்பானது' என கூறியுள்ளார்.

மேலும் அந்த இடத்தைவிட்டு வெளியேறிய பின்னர் சுமார் 30 நிமிடங்களில் தான் கைது செய்யப்பட்டதாகவும் அவர் உறுதிப்படுத்தினார். அத்தோடு அனைத்து நாடுகளிலும் இராஜதந்திரிகளை கைது செய்வது சட்டவிரோதமானது' என்று அவர் கூறினார்.

இதேவேளை தெஹ்ரானுக்கான பிரித்தானிய தூதுவரை சுருக்கமாக தடுத்து வைத்த ஈரானை நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர தலைவர் விமர்சித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post