சிறுபான்மைக் கட்சிகளுடனான உறவு பாதிக்காத வகையில் கூட்டமைப்பு தீர்மானம் எடுக்கும் - வடகிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பில் சித்தார்த்தன் - Yarl Voice சிறுபான்மைக் கட்சிகளுடனான உறவு பாதிக்காத வகையில் கூட்டமைப்பு தீர்மானம் எடுக்கும் - வடகிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பில் சித்தார்த்தன் - Yarl Voice

சிறுபான்மைக் கட்சிகளுடனான உறவு பாதிக்காத வகையில் கூட்டமைப்பு தீர்மானம் எடுக்கும் - வடகிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பில் சித்தார்த்தன்


                       
எதிர்வரும் பாரர்ளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பில் இறுதி முடிவை கூட்டமைப்பு இன்னும் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவ்வாறு பொட்டியிடுவதன் சாதக பாதக நிலைமைகள் தொடர்பில் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படுமென்றார்.

வடக்கு கிழக்கிற்கு வெளியிலும்; கூட்டமைப்பு போட்டியிடவுள்ளதாக சொல்லப்படுவது குறித்து கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

வடக்கு கிழ்க்கிற்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பில் கட்சிக் கூட்டங்களில் யோசிக்கப்பட்டது. ஆனால் அது தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை. வடகிழக்கிற்கு வெளியே போட்டியிடுவது சில வேளைகளில் பல பிரச்சனைகளை அல்லது தாக்கங்களையும் செலுத்தலாமென்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

எங்களுடைய கட்சியைப் பொறுத்தவரையில் இவ்வாறு வடக்கு கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பில் இருக்கின்ற நிலைமைகளை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சொல்லியுள்ளளோம். அதனையே ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் சொல்லிருயிருக்கின்றார்.

வடக்கு கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவதன் மூலம் நாங்கள் ஒரு ஆசனத்தை தானும் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஒன்று இருக்குமாக இருந்தால் அநியாயமாக மற்ற தமிழ் சிறுபான்மைக் கட்சிகளை குழப்புகின்ற அல்லது அவர்களைப் பாதிக்கின்றதொரு நிலைமை ஏற்பட்டு விடலாம். அது மாத்திரமல்ல அந்தச் சிறுபான்மைக் கட்சிகளுடன் எங்களுக்கு இருக்கக் கூடிய நல்லுறவுகள் அற்றுப்போகிற நிலைமைகள் வந்துவிடும்.

ஆகவே இவை எல்லாம் சம்மந்தமாக நாங்கள் மிகக் கவனமாகச் சிந்தித்து தான் செயற்பட வேண்டும். கூடியளவிற்கு தென்னிலங்கையிலே செயற்படுகின்ற சிறுபான்மைக் கட்சிகளுடனும் ஒரு பேச்சுவார்த்தை நடாத்தி அது எப்படிச் செய்யலாம் அல்லது எப்படிச் செய்யாமல் விடலாம் என்பது சம்மந்தமாக ஆராய்ந்து அதன் பிறகு தான் சரியான ஒரு முடிவை எடுக்க வேண்டுமென்பது தான் என்னுடைய அபிப்பிராயம்.
;

0/Post a Comment/Comments

Previous Post Next Post