சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் - Yarl Voice சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் - Yarl Voice

சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம்

வலி.மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் அருள்.சிவானந்தன் சமாதான நீதிவானாக நியமனம் பெற்றுள்ளார். யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அ.பிரேமசங்கர் முன்னிலையில் கடந்த 20 ஆம் திகதி இவர் சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அகில இலங்கை ரீதியாக உள்ள பல்வேறு சமூகமட்ட சேவை அமைப்புக்களில் இவர் அங்கத்துவம் வகித்து அதன் மூலம் மக்கள் பணியாற்றி வருகின்றார்.

குறிப்பாக அகில இலங்கை சைவ மகா சபையின் பொருளாளர் சுழிபுரம் கலைமகள் இலவசக் கல்வி நிலையத்தின் உப தலைவர் கலைமகள் முன்பள்ளி முகாமைத்துவக் குழுவின் உப தலைவர்இ கலைமகள் சனசமூக நிலையத்தின் போசகர் மானிடம் அறக்கட்டளையின் பொருளாளர் ஆகிய பொறுப்புக்களை ஏற்று சிறப்பாக பணியாற்றுகின்றார்.

இவற்றைவிடஇ கணித பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ள இவர் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு வீட்டிலும் இலவசக் கல்வி நிலையத்திலும் கற்பித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post