இலங்கை இந்திய உறவுப்பாலத்தை மேம்படுத்தும் இந்தியக் கல்வி கண்காட்சி யாழில் ஆரம்பம் - Yarl Voice இலங்கை இந்திய உறவுப்பாலத்தை மேம்படுத்தும் இந்தியக் கல்வி கண்காட்சி யாழில் ஆரம்பம் - Yarl Voice

இலங்கை இந்திய உறவுப்பாலத்தை மேம்படுத்தும் இந்தியக் கல்வி கண்காட்சி யாழில் ஆரம்பம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உறவுப்பாலத்தை ஏற்படுத்தும் முகமாக இந்தியாவில் இலங்கை மாணவர்களுக்கான கல்வித் திட்டம்( இலங்கை மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில்)தொடர்பான இந்திய கல்வி கண்காட்சி இன்று யாழ். வலம்புரி கோட்டலில் நடைபெற்றது.

இந்தக் கண்காட்சியில் இந்தியாவில் இடம்பெறவுள்ள கல்வி தொடர்பாக விரிவாக காட்சிப்படுத்தப்பட்டுல்லது.

இந்திய அரசு வெளிநாட்டு மாணவர்களுக்கு என்னென்ன புலமைப்பரிசில்களை வழங்குகிறது என்பதை இந்தக் கண்காட்சி ஊடாக பார்க்க கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சி நாளை 30 ஆம் திகதியும் யாழ். வலம்புரி கோட்டலில் முற்பகல் 10 மணியில் இருந்து மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளதது.

நிகழ்வின் ஆரம்ப விழாவில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துனைத்தூதுவர் கே. பாலச்சந்திரன்  வடக்கு மாகாண கல்வி அமைசின் செயலர் இலன்கோவன் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் உதயகுமார் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள் யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


--

0/Post a Comment/Comments

Previous Post Next Post