மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஒளி விழா
யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வருடாந்த ஒளி விழா நிகழ்வு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.இந் நிகழ்வில் அதிதிகளின் விசேட உரைகளும் சிறார்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மேலும் இந் நிகழ்வில் யாழ் மாநகர பிரதி முதல்வர் ஆணையாளர் பிரதி ஆணையாளர் பொறியியலாளர்கள் மாநகர சுகாதார வைத்திய அதிகாரிகள் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள்இ மாநகர கிளைகளின் திணைக்கள தலைவர்கள் மாநகர உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment