நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நீதித்துறையுடன் தொடர்புடைய அலைபேசி உரையாடல்களின் பிரதிகளை பெற்றுக்கொள்வதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
நீதிபதிகள்இ நீதித்துறையுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து ரஞ்சன் ராமநாயக்க மேற்கொண்டுள்ள தொலைபேசி உரையாடல்களின் பிரதிகளை அனுப்புமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் காணப்படும் பட்சத்தில் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Post a Comment