கச்சதீவு திருவிழா தொடர்பில் யாழ் அரச அதிபரின் அறிவிப்பு - Yarl Voice கச்சதீவு திருவிழா தொடர்பில் யாழ் அரச அதிபரின் அறிவிப்பு - Yarl Voice

கச்சதீவு திருவிழா தொடர்பில் யாழ் அரச அதிபரின் அறிவிப்பு

கச்சத்தீவு திருவிழாவிற்கு இம்முறை இலங்கை - இந்தியர்கள் 9 ஆயிரம் பேர் பங்கு கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் கச்சத்தீவு திருவிழா ஏற்ப்பாடுகள் சம்மந்தமான கலந்துரையாடல் இன்று காலை நடந்தது.

இக் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

கச்சத்தீவு ஆலயத்தின் வருடாந்த பெரும் திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத்திருவிழா ஏற்ப்படுகள் சம்மந்தமாக இன்று கலந்துரையாட்டப்பட்டது.

இந்த திருவிழாவிற்க்கு கடற்படையினரின் உதவி மிக முக்கியமானதான ஒன்றாகும். ஆழ்கடல் போக்குவரத்திற்க்கு அவர்களின் உதவி இன்றியமையாததாகும்.

இதன்படி திருவிழாவிற்கு முதல் நாளான 6 ஆம் திகதி அதிகாலை 5 மணியில் இருந்து மதியம் 11 மணிவரைக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகாட்டுவான் வரை பஸ் போக்குவரத்து ஏற்ப்படு செய்யப்பட்டுள்ளது.

அன்று காலை 6 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரைக்கும் குறிகாட்டுவானில் இருந்து கச்சத்தீவு நோக்கிய படகு சேவையும் நடை பெறும்.

கடந்த முறை திருவிழா விற்க்கு இந்தியாலில் இருந்து மட்டும் 3 ஆயிரம் பேரும் இலங்கையில் இருது 6 ஆயிரம் பேரும் கலந்து கொண்டனர்.

இதே போன்று இம்முறையும் 9 ஆயிரம் பேர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இம்முரையும் கச்சத்தீவில் பொலுத்தீன் பாவனை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது என்றார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post