அட்வான்ஸ் வாங்கிவிட்டு மாயமான நடிகை... - Yarl Voice அட்வான்ஸ் வாங்கிவிட்டு மாயமான நடிகை... - Yarl Voice

அட்வான்ஸ் வாங்கிவிட்டு மாயமான நடிகை...

பட்டதாரி களவாணி மாப்பிள்ளை படங்களில் நடித்த அதிதி மேனன் படக்குழுவினரிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு மாயமாகி இருக்கிறார்.

'பட்டதாரி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை அதிதி மேனன். அட்டக்கத்தி தினேசுடன் 'களவாணி மாப்பிள்ளை' படத்தில் நடித்திருந்தார். நடிகர் அபி சரவணனுடன் ஏற்பட திருமண பிரச்சினையை அடுத்து சென்னையில் இருந்து கிளம்பி கேரளா சென்றுவிட்டார்.

சமீபத்தில் வெளியான பிக் பிரதர் படத்தில் மோகன்லாலுடன் மிர்னா மேனன் என பெயர் மாற்றி நடித்தார். இந்நிலையில் கட்டம் போட்ட சட்டை என்ற படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிதி மேனனை வலை வீசி தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஒரு லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்து அதிதி மேனனை தங்கள் படத்தில் ஒப்பந்தம் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு வாரம் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து விட்டு பின்னர் கேரளா சென்ற அதிதியை அதன் பிறகு தொடர்புகொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளங்கள் மூலம் அதிதியை தொடர்பு கொள்ள முயன்றதாகவும் ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட சங்கங்களில் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post