ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் விருது விழாவிற்கு அனைவரையும் அழைக்கிறார் அதிபர் றஜீவன் - Yarl Voice ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் விருது விழாவிற்கு அனைவரையும் அழைக்கிறார் அதிபர் றஜீவன் - Yarl Voice

ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் விருது விழாவிற்கு அனைவரையும் அழைக்கிறார் அதிபர் றஜீவன்

யாழ்ப்பாணம் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் விருது வழங்கும் விழா எதிர்வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கே.கே.எஸ் வீதி நாச்சிமார் கோவில் அருகாமையிலுள்ள ராஐh ஐஸ்கிறீம் கவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கல்லூரியின் அதிபர் லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரர்ளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வித் துறைத் தலைவர்; கலாநிதி ஜெயலஷ்மி இராசநாயகம், மற்றும் கௌரவ விருந்தினர்களாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஈ-சிற்றி கல்லூரியில் ஆங்கில டிப்ளோமா பாடநெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு சித்தி விருதுகளும் இதன் போது வழங்கி வைக்கப்படவுள்ளன.

ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் பாரம்பரிய முறைப்படி சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் ஆரம்பமாகி நடைபெறவுள்ள இந் நிகழ்விற்கு அனைவரையும் வருகை தருமர்று கல்லூரியின் அதிபர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் அழைப்பு விடுத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post