சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு - Yarl Voice சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு - Yarl Voice

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளதுடன் புதிதாக ஆயிரத்து 459 பேருக்கு இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதன் அடிப்படையில் மொத்தமாக தற்போது 5 ஆயிரத்து 974 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்இ சீனாவில் உள்ள அமெரிக்க மற்றும் ஜப்பானிய பிரஜகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சீன பெரும் நிலப்பரப்புடனான பிருத்தானிய மற்றும் ஜப்பானிய பயணிகள் வாநூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வெளியேற்றப்பட்ட இரண்டு ஜப்பானியர்கள் இந்த தொற்றிற்கு உள்ளாகியுள்ளதற்கான சாத்தியகூறுகள் தென்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இந்த தொற்று தொடர்பாக வெளியாகும் செய்திகள்இ உலகளாவிய ரீதியாக மக்களை மேலும் பீதியடைய செய்வதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீன தலைநகர் பீஜிங் உட்பட நகரங்களின் அனைத்து வீதிகளும் வெறிச்சோடிய நிலையில் உள்ளன.

வீதியில் செல்லும் ஒரு சிலர் முகமூடியணிந்த நிலையில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன பங்குச் சந்தையில் பாரிய வீழ்ச்சி கண்டநிலையில்இ பரிவர்தனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

சீன பங்கு சந்தை நடவடிக்கைகள் மீண்டும் பெப்பிரவரி மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த தொற்றிற்கான செயல்திறனை கொண்ட மாற்று மருந்தினை கண்டுபிடிக்கும் நோக்கில் முனைப்பான நடவடிக்கைகளில் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் பரிசோதனைகள் மூலம் முதன் முதலாக சீனாவிற்கு வெளியே அவுஸ்திரேலிய ஆய்வு கூடத்தில் உயிர்கொல்லி கொரோனா வைரஸ் கிருமியினை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்கொல்லிக்கான ஒளடதத்தை கண்டு பிடிக்கும் முயற்சியில் இது முதலாவது வெற்றி என கருத முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post