அரசியல் கைதிகளை சிறையில் வைத்துக் கொல்லாதே - கொலைக்கு நீதி கோரியும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் யாழில் போராட்டம் - Yarl Voice அரசியல் கைதிகளை சிறையில் வைத்துக் கொல்லாதே - கொலைக்கு நீதி கோரியும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் யாழில் போராட்டம் - Yarl Voice

அரசியல் கைதிகளை சிறையில் வைத்துக் கொல்லாதே - கொலைக்கு நீதி கோரியும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் யாழில் போராட்டம்


அரசியல் கைதி மகேந்திரனின் மரணத்திற்கு நீதி கோரியும் சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும்  யாழ் மத்திய பேருந்து
நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் போராட்டத்தின் போது அரசுயல் கைதிகளை சிறைகளிலடைத்து கொலை செய்யாதேஇ ஜேவிபி இற்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதியாஇ பயங்கரவாத அதனை சட்டத்தை நீக்கு கைதிகளை எஒல்லலாமல் விடுதலை செய் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

மேலும் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த மகேந்திரனின் கொலைக்கு நீதி வேண்டும் அனைத்து  அரசுயல் கைதிகளையும் விடுவிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினர்

இப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் அரசுயல் கைதிகளின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிரைந்தனர்.0/Post a Comment/Comments

Previous Post Next Post