எதிர்க்கட்சித் தலைவராக நீடிக்கும் எண்ணம் இல்லை - சஜித்பிரேததாஸ - Yarl Voice எதிர்க்கட்சித் தலைவராக நீடிக்கும் எண்ணம் இல்லை - சஜித்பிரேததாஸ - Yarl Voice

எதிர்க்கட்சித் தலைவராக நீடிக்கும் எண்ணம் இல்லை - சஜித்பிரேததாஸ


நீண்ட காலமாக எதிர்கட்சியில் நீடிப்பதற்கான எண்ணம் இல்லை என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேததாஸ தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொலனறுவை உள்ளிட்ட விவசாய பகுதியிலுள்ள மக்கள் இலவசமாக உரம் கிடைக்குமென எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

எனினும் பணம் செலுத்தி கூட உரம் பெற முடியாத நிலை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது.

நாம் நீண்ட நாட்களுக்கு எதிர்க்கட்சியில் இருப்பதற்கு எதிர்பார்க்கவில்லை.

ஐக்கிய தேசிய கட்சி உட்பட புதிய கூட்டணியின் ஊடாக எதி;ர்வரும் பொதுத் தேர்தலை வெற்றி கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

அந்த கூட்டணிக்கு தலைமை தாங்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post