தேசிய சமுர்த்தி தைப்பொங்கல் விழா யாழில் - Yarl Voice தேசிய சமுர்த்தி தைப்பொங்கல் விழா யாழில் - Yarl Voice

தேசிய சமுர்த்தி தைப்பொங்கல் விழா யாழில்

சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாக 2020ம் ஆண்டு  தைபொங்கல் விழா யாழ் மாவட்டத்தின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் இன்று அச்சுவேலி பகுதியில் சிறப்பாக முன்னேடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் விருந்தனர்களாக மகளிர்இ சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக பாலசூரிய அவர்களும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கணைப்புக்குழுத்தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களும் சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் யாழ் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் கிளிநொச்சி சமுர்த்தி பணிப்பாளர் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலகர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஆவரங்கால் சமுர்த்தி வங்கியில் பொங்கல் விழாவோடு ஆரம்பமாகி தொடர்ந்தும் பயானாளிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்வும்இ கொடுக்கல் வாங்கல் நிகழ்வும் விருந்தினர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதை அடுத்து விருந்துனர்களுக்கு பொங்கல் பரிமாறப்பட்டு யாழ்ப்பாணத்தின் அடையாளத்தை பிரதிபலிக்கும் நினைவு பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய அங்கஜன் இராமநாதன்...

யாழ் மாவட்டம் வறுமையில் 8 வது மாவட்டமாக காணப்படுவதாகவும் யாழில் உள்ள முயற்சியாளர்களையும் உற்பத்தியாளர்களையும் உக்கிவிப்பதற்கு சிறந்த சந்தைவாய்ப்பையும் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி முன்னேற்றப்பட வேண்டும் என தெரிவித்தார். ஐனாதிபதியால் தற்போது வழங்கப்பட இருக்கும் ஒரு லட்சம் வேலை வேலைவாய்ப்புகள் சமுர்த்தி பயானாளிகளுக்கும் சமுர்த்தி பெறுவதற்கு தகுதி உடையவர்களுக்கும் முதலுரிமை அடிப்படையில் வழங்கப்டவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கௌரவ தாரக பாலசூரிய சமூகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவர்களுக்கு அங்கஜன் இராமநாதன் அவர்களினால் முன்னாள் போராளிகள்இ போரினால் காணமல்போனோரின் குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மாற்றுத்திறனாளிகளை சமுர்த்தி பயனாளிகளாக்கவும் மற்றும் புதிய சமுர்த்தி வேலைத்திட்டங்களை செயற்படுத்துமாறும் வேண்டுகோள் ஒன்றை விடுத்தமைக்கு அமைவாக இராஜாங்க அமைச்சர் மிக விரைவாக அதற்கு நடவடிக்கை எடுப்பாதக அவரின் உரையிலேயே உறுதியளித்தார்.

மற்றும் கௌரவ தாரக பாலசூரிய சமூகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவர்கள் உரையாற்றும் பொழுது யாழ்ப்பாண முயற்சியாளர்களுக்கு சந்தைவாய்ப்புக்கள் தேசிய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச ரீதியில் ஏற்படுத்தப்படும் எனவும்  யாழ் பனை உற்பத்தி பொருட்களை இணையத்தின் (ழுடெiநெ) மூலம் சந்தைப்படுத்த ஊக்கிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார் மற்றும் சமுர்த்தி திட்டமுடாக இலங்கை முழுவதும் வறுமை ஒழிப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் காணமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர்கள்இ முன்னாள் போராளிகள் மீள்குடியேற்றப்பட்டவர்கள் என்போரின் வாழ்க்கையை முன்னேற்றுவது தமது தலையாய கடமையாகும். இப்பொறுப்பை செவ்வனவே செய்வேன் என உறுதியளித்தார்.

தொடர்ந்து ஆவரங்கால் சமுர்த்தி அலுவலகத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயலி (யுpp) யை இலங்கை முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான மற்றும் பயனாளிகளுக்கான வேலைகளை இவ் செயலி மூலம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் துவிச்சக்கரவண்டிகள் விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டது.




0/Post a Comment/Comments

Previous Post Next Post