நித்தியானந்தாவின் பெண் சீடரின் வீடியோவால் சர்ச்சை - Yarl Voice நித்தியானந்தாவின் பெண் சீடரின் வீடியோவால் சர்ச்சை - Yarl Voice

நித்தியானந்தாவின் பெண் சீடரின் வீடியோவால் சர்ச்சை

தனது உயிருக்கு ஆபத்து என நான் கூறியது ஒன்றரை ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட பழைய வீடியோ என நித்யானந்தா பெண் சீடர் தத்துவப் பிரியானந்தா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் தனது 3 மகள்கள் 1 மகனை பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்த்திருந்தார். இந்நிலையில் தங்கள் குழந்தைகளை நித்யானந்தா குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்திற்கு கடத்தி சென்று சிறை வைத்திருப்பதாக ஜனார்த்தன சர்மா போலீசில் புகார் அளித்தார்.

ஆசிரமத்தில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்த ஜனார்த்தன சர்மாவின் ஒரு மகள்இ மகனை மீட்டனர். மூத்த மகள் லோபமுத்ரா என்ற தத்துவப்பிரியானந்தாஇ மற்றொரு மகள் நந்திதா ஆகிய 2 பேரும் ஆசிரமத்தில் இல்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜனார்த்தன சர்மா மகள்களை மீட்டு தன்னிடம் ஒப்படைக்கக்கோரி குஜராத் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையின்போது நித்யானந்தா வெளிநாடு தப்பிச்சென்று விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும்இ லோபமுத்ராவும்இ நந்திதாவும் மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் நாட்டில் இருந்து வீடியோ வெளியிட்டனர். அதில் தந்தையால் எங்களது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே இந்தியா வர எங்களுக்கு விருப்பம் இல்லை என்றனர். அவர்களது பதிலை கோர்ட்டு ஏற்கவில்லை.

நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் ஜனவரி 16-ந்தேதிக்குள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே தத்துவப் பிரியானந்தாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. அடுத்த வீடியோ வெளியிடுவதற்குள் நான் உயிரோடு இருப்பேனோஇ இல்லையோ எனத் தெரியவில்லை என கதறுகிறார்.

இந்த வீடியோவை பார்த்த ஜனார்த்தன சர்மா அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அகமதாபாத் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் தத்துவப் பிரியானந்தா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உயிருக்கு ஆபத்து என நான் கூறியது ஒன்றரை ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட பழைய வீடியோ என விளக்கம் அளித்துள்ளார்.

இந்த வீடியோவில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. தலைமறைவாக உள்ள நித்யானந்தாவை கண்டுபிடிக்கவுமஇ ஜனார்த்தன சர்மாவின் மகள்களை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post