ஐதப் பொங்கள் திருநாளை முன்னிட்டு முதல்வர் ஆர்னொல்ட் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள தைப் பொங்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது..
தைப்பொங்கல் தமிழர்களின் பொது நன்நாள். ஆதவனுக்கு நன்றி செலுத்தும் அர்ப்பணிப்புக்கு உரிய நாள். இன்றைய காலகட்டத்தில் சமய வேறுபாடற்று பொதுப் பண்டிகையாக உலகிற்கு உணவு தரும் உழவர் திருநாள் என அனைவரும் இந்நன்நாளை வரவேற்கின்றனர் கொண்டாடுகின்றனர்.
'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பர். தை ஆரம்பத்திலிருந்து நற்காரியங்களை நம்மவர் மேற்கொண்டு வருவது வழமையாய் தொன்று தொட்டு இருந்து வரும் பாரம்பரியமாகும்.
இதனாலே தான் தைமாதத்தின் மகத்துவமும் தைப்பொங்கலின் சிறப்பும் எமக்கு எடுத்துக்ககாட்டாக விளங்குகிறது.
துன்பங்கள் தொலைத்து மக்கள் மத்தியில் இன்பமே விளங்கட்டும். இதுவே எனது இதய பூர்வமான பொங்கல் வாழ்த்தாகும்.
பொங்கலோ! பொங்கல்!
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக.
இத்தைத்திருநாளில் இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!
Post a Comment