போர் தேவையா? இல்லையா? என்பதை ஈரானே தீர்மானிக்க வேண்டும் - அமெரிக்க ஐனாதிபதி ட்ரம்ப் - Yarl Voice போர் தேவையா? இல்லையா? என்பதை ஈரானே தீர்மானிக்க வேண்டும் - அமெரிக்க ஐனாதிபதி ட்ரம்ப் - Yarl Voice

போர் தேவையா? இல்லையா? என்பதை ஈரானே தீர்மானிக்க வேண்டும் - அமெரிக்க ஐனாதிபதி ட்ரம்ப்

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கிடையில் போர் பதற்றம் நிலவி வருகின்ற நிலையில் போர் தேவையில்லை என்ற முடிவுக்கான பேச்சுவார்த்தைக்கு ஈரானிடம் தான் முடிவு உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இருநாடுகளும் தற்போது மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருவதால் மூன்றாம் உலகப் போர் வெடித்து விடுமோ என்ற அச்சம் உலகநாடுகள் மத்தியில் நிலவி வருகின்றது.

ஆகையால் இருநாடுகளுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தையை ஏற்படுத்த பிரித்தானியா சீனா ரஷ்யா சௌதி ஆகிய நாடுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

இந்த நிலையில் இப்பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது 'பொருளாதாரத் தடைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் காரணமாக ஈரான் திணறி வருகிறது. எனவே அவர்கள் பேச்சுவார்த்தைக்கு கட்டாயம் உடன்படுவார்கள் என தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்தார்.

அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தினால் அதை நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. முடிவு ஈரானிடம் தான் உள்ளது. இதில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை' என பதிவிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post