றி - மெக்ஸின் (Re/Max) 2 ஆவது அகவை யாழ்.நகரில் நடந்தது! - Yarl Voice றி - மெக்ஸின் (Re/Max) 2 ஆவது அகவை யாழ்.நகரில் நடந்தது! - Yarl Voice

றி - மெக்ஸின் (Re/Max) 2 ஆவது அகவை யாழ்.நகரில் நடந்தது!


உலகில் முன்னணி வீடு காணி விற்பனை நிறுவனமான Re/Max  இன் அங்கீகார மற்றும் யாழ் மண்ணின்  முதல் நிறுவனமான Re/Max North Realty தமது 2வது வருட வெற்றி விழாவை வெகு விமர்சையாக  18.01.2020 அன்று ழேசவா புயவந டில துநவறiபெ ல் கொண்டாடியது.

அச்சிறப்பு நிகழ்விலே கலாநிதி  அகிலன் முத்துகுமாரசாமி யாழ்ப்பாண வர்த்தக தொழிற்றுறை மன்றத்தின் தலைவர் கலாநிதி  வி.கே.விக்னேஷ் கனடாவில்  இருந்து வருகை தந்த  றொஸ்கி நவரட்ணம் டாக்டர்.திலக் ராஜ்குமார்  Re/Max ஸ்ரீ லங்கா அங்கத்தினர்கள்  Re/Max ஏனைய தரகு உரிமையாளர்கள் ஆகியோர் சிறப்பு  விருந்தினராக  வருகை தந்து நிகழ்வை கௌவரவித்ததுடன் நிறுவனத்தின்  தூண்களாக இருக்கும்  நல் வாடிக்கையாளர்களும் கலந்து  கொண்டு  விழாவை சிறப்பித்தனர்.

2வது நிறைவு விழாவின் முக்கிய  பதிவாக நிறுவனத்தின்  ஊழியர்களுக்கான வருடாந்திர சாதனை விருதுகள் வழங்கி கௌவரவிக்கப்பட்டது. அதில் 2019ம் ஆண்டுக்கான

*  ACE OF INITIATIVE-2019 -  Thirumalaikumar Kalyanasundaram
*  ULTIMATE TEAM PLAYER-2019 -  Sritharan Yogarasa
* EMPLOYEE OF THE YEAR-2019 - Thivashanthi Soundararajan
*  MOST EFFICIENT REALTOR - 2019 - Vijenthan Gunarathnam
*  ROOKIE OF THE YEAR-2019 - Sharmilin Rajeevan
* MOST IMPROVED REALTOR-2019 - Thusanth Pooranachanden
* OUTSTANDING LEADERSHIP-2019 - Dilakshika Kunaratnam
* TOP LISTER-2019 -  Sharmilin Rajeevan
* OUTSTANDING ACHIEVEMENT-2019 - Nitharsan Antonrasa
* TOP PRODUCER-2019 - Vijenthan Gunarathnam
ஆகயோர் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

'யாரும் எதையும்  ஆரம்பிக்க முடியும்  ஆனால்  வெற்றியை  ஒரு  சிலாரே அடைய முடியும் 'எனும் சொற்பதத்திற்கு மிகவும் பொருத்தமுடைய கனடா வாழ்  தமிழரும் Re/Max North Realtyன் நிர்வாக  இயக்குநருமான  லதன் வரதராஜா அவர்களின் சிறந்த  பயிற்சிப் பின்னூட்டலின் விளைவாக இந்த  வெற்றியை  அடைந்தோமென தமது வெற்றியின் மகிழ்வை விழாவில் விருது வாங்கிய வெற்றியாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து  வரும் வருடங்களில் இன்னும் மிகச்சிறந்த  சேவையை தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டுமெனும் உறுதியில் Re/Max North Realty   தமது 2வது ஆண்டு விழாவை இனிதே நிறைவுற்றது.











0/Post a Comment/Comments

Previous Post Next Post