வங்குரோத்து நிலையில் கூட்டமைப்பு, பூகோளப் போட்டியை சரியாக பயன்படுத்தினால் தீர்வை அடையலாம் - கஜேந்திரகுமார் - Yarl Voice வங்குரோத்து நிலையில் கூட்டமைப்பு, பூகோளப் போட்டியை சரியாக பயன்படுத்தினால் தீர்வை அடையலாம் - கஜேந்திரகுமார் - Yarl Voice

வங்குரோத்து நிலையில் கூட்டமைப்பு, பூகோளப் போட்டியை சரியாக பயன்படுத்தினால் தீர்வை அடையலாம் - கஜேந்திரகுமார்


சிறிலங்காவை மையப்படுத்தி நடைபெறுகின்ற பூகோளப் போட்டியை சரியான முறையில் பயன்படுத்துவோமாக இருந்தால் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வை அடைய முடியுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் தீரவு குறித்து எதனையும் பேசாமல் அபிவிருத்தி குறித்து மட்டுமே பேசி வருகின்ற நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோருகின்ற தீர்வை அடையவது சாத்தியமாகுமா எனக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்

நிச்சயமாக சாத்தியம். இதில் எங்களைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் இருக்கின்றன. அதில் முதலாவது அரசியல் தீர்வைப் பெறுவது என்பதில் சிங்கள தேசம் விரும்பி ஒரு தீர்வைத் தரப் போறதில்லை என்பதில் நாங்கள் தெளிவு. 13 ஆம் திருத்தம் என்பது கூட சிங்கள தேசம் விரும்பிக் கொண்டு வரவில்லை.

இந்தியா இலங்கைத் தீவிற்கு கடும் அழுத்தத்தைக் கொடுத்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக் கூட கைச்சாத்திட வைத்த அதனூடாக இந்தியாவின் நலன்கள் பேணக் கூடிய வகையில் ஒரு ஒப்பந்தத்தை செய்வதனூடாகத் தான் 13 ஆவது திருத்தம் பேருக்காகவது செய்ய வேண்டி வந்தது.

ஆக 13 ஆவது திருத்தம் கூட சிங்கள மக்கள்இ சிங்கள தலைவர்கள் விரும்பி கைச்சாத்திடவில்லை. அதை நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். சர்வதேச சமூகம் தான் அதைச் செய்விச்சது. இந்தியா தான் தன்னுடைய அழுதத்தத்தினூடாக அதைச் செய்தது.

அன்றைக்கு இந்தியா அழுத்தம் பிரயோகித்ததற்கான காரணம் அன்றைக்கு அமெரிக்காவுடன் இந்தியாவிற்குப் போட்டி. அந்தக் காலத்தில் அமெரிக்கா இங்கு வேருன்ற பார்க்கிறது. இங்கு உள்ளிட பார்க்கிறது என்றதற்காக அழுத்தத்தைப் போட்டு அமெரிக்கா வறாதை இந்தியா இலங்கை ஒப்பந்தம் ஊடுhக தடுத்தது.

ஆனால் இன்றைக்கு அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு பல வருடங்களின் பின்னர் இன்றைக்கு சீனா இலங்கைக்குள் வந்து விட்டது. இன்றைக்கு சீனா இலங்கைத் தீவில் வேருன்றி இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் அந்த வல்லரசுகள் எப்படிச் செயற்படுவார்கள் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு தரப்பு அதாவது வெளி வல்லரசு வரக் கூடாது என்பதற்காக அதனைத் தடுப்பதற்காக அழுத்த்தத்தைப் பிரயோகித்து விடுதலைப் போராட்டத்தைப் பலப்படுத்தி சிறிலங்கா அரசு அந்த அழுத்தத்தில் இருந்து தப்புவதற்கு இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தத்திற்குச் சென்று தங்களை ஏற்றுக் கொண்டு ஒரு அமைதி நிலைமையை தனக்கு தேடிக் கொண்டது. அப்படிப்பட்ட ஒரு அழுத்தம் இன்றைக்கு போதாது. ஏNனென்றால் அதைத் தாண்டியும் வந்து சீனா வந்துவிட்டது.

ஆக எந்தளவு தூரம் சீனா இலங்கையில் இருப்பதை விரும்பாத வல்லரசுகள் அழுத்தத்தத்தை பிரயோகிக்க தயாராக இருப்பார்கள் என்பதை எங்களது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் தான் எங்களது நிலைப்பாடுகளையும் மிகத் தெளிவாக முன்வைக்க வேண்டும். அதில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். அவ்வாறு முன்வைப்பதன் ஊடாக இந்த போட்டித் தன்மையை வைத்துக் கொண்டு நாங்கள் அரசியல் தீர்வை பெறலாம்.

நாங்கள் நாட்டைப் பிரிக்கச் சொல்லி கேட்கவில்லை. இந்த வல்லரசுகளின் நலன்சார்ந்த போட்டியில் வல்லரசுகளுக்கு தேசிய பாதுகாப்பு பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு நிலைமைகள் மோசமானதாக இருந்தால் விசேசமாக இந்தியா போன்ற நாடுகளுக்கும் மேற்கிற்கும் சீனாவின் வருகை அந்தளவு ஒரு சவாலாக இருக்குமாக இருந்தால் இலங்கைத் தீவை பிரிப்பதற்கு கூட அவர்கள் தயங்கமாட்டார்கள் என்பதையும் தெளிவாகச் சொல்கிறேன்.

உலகத்தில் புதிய நாடுகள் உருவாகியிருக்கிற அனைத்து சந்தர்ப்பங்களிலும் பூகோளப் போட்டிகள் தான் அடிப்படைக் காரணங்களாக இருந்திருக்கிறது. ஆகவே எங்களைக் பொறுத்தவரையில் நாங்கள் பிரிவினையைக் கேட்கவில்லை. எங்களுக்கு அப்படிக் கோரவும் முடியாது. கோருவதற்கு சட்டமும் விடாது. ஆனால் நாங்கள் இலங்கைத் தீவில் எங்களை தனித்தேசமாக அங்கீகரிக்கிற விடயத்தில் நாங்கள் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை. அதில் நாங்கள் உறுதியாக இருந்தால் இலக்கை அடையலாம் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

இதில் இரண்டாவது விடயம் சிறிலங்கா அரசாங்கம் அரசியல் தீர்வை கொடுப்பதற்கு தயாரில்லை என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு இன்னொரு பக்கம் அபிவிருத்தியை செய்ய தாயர் என்று சொல்கின்றனர். இதில் நாங்கள் மிகத் தெளிவு.

இன்றைக்கு தமிழ் மக்கள் தங்களின் தலைமை என்று கடந்த பத்து வருசமாக தெரிவு செய்த தரப்பு கடந்த ஐனாதிபதி தேர்தலில் கூட எப்படியாவது கோத்தபாய ராஐபக்சவை தோற்கடிக்க வேண்டுமென்று தமிழ் மக்களுக்கு பயப்பீதியை ஏற்படுத்தினாலும் கூட தேர்தல் முடிந்த கையோடு தலைகீழாக மாறி இன்றைக்கு கோத்தபாய அபிவிருத்தி செய்யப் போவதாக சொன்னவுடன் அந்த அபிவிருத்திக்கு தாங்களும் அதாவது கோத்தபாய ராஐபக்சவுடன் தாங்களும் சேர்ந்து செயற்பட தயார் என்று பல்டி அடித்தச் சொல்கிறார்கள்.

அந்தளவிற்கு கேவலாமான நிலைக்கு தான் அவர்களுஐடய அரசியல் தள்ளப்பட்டிருக்கிறது. தங்களுடைய இருப்பிற்கு தங்களுடைய சுயநலத்திற்காக அரசாங்கத்தோடு இணைந்து தங்களுக்கு கிடைக்கக் கூடிய சலுகைகளைப் பெறுவதற்கான எதையும் அவர்கள் செய்ய தயார்.

கோத்தபாய தரப்பினர்கள்; ஆட்சிக்கு வந்தால் தமிழினம் அழியும் என்று நேற்றுவரை தமிழ் மக்களுக்குச் சொல்லிப் போட்டு இன்றைக்கு யாரைத் தோற்கடிக்க வேண்டுமென்று சொன்னதோ இன்றைக்கு அந்தத் தரப்பு ஆட்சிக்கு வந்த உடனேயே அவர்களை அணைத்து அவர்களோடு வேலை செய்ய தயார் என்று சொல்லுமளவிற்கு இவர்களது அரசியல் ஒரு வங்குரோத்து நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

ஆனால் இதன் ஆபத்து என்னவென்றால் இன்றைக்கு கோத்தபாய சொல்கிற அபிவிருத்தி என்பது தமிழ் மக்களுடைய அபிவிருத்தியல்ல. கோட்டபாய ராஐபக்ச சொல்லக் கூடிய அபிவிருத்தியில் வடகிழக்கிற்கு வரக் கூடிய அபிவிருத்தி என்பது வடகிழக்கை சிங்கள மயமாக்குவதற்கான அத்திபாரங்களை போடுவதற்கான அபிவிருத்தி தான். அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கிற இடத்தில் சிங்கள மக்கள் தாங்களோவே வந்து இந்தப் பிரதேசங்களை ஆக்கிரமிக்கிற அடித்தளங்களைப் போடுவதற்கான அபிவிருத்தியைத் தான் அவர் மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றார்.

அப்படிப்பட்ட அபிவிருத்திக்கு தான் இன்றைக்கு பாராளுமன்றத்தில் இருக்கக் கூடிய இந்த தமிழ் தரப்புக்கள் அரசுடன் சேர்ந்த செயற்படத் தயார் என்று சொல்லியிருக்கினம். அபிவிருத்தி என்பது தமிழ் மக்களின் தேச அடையாளத்தைப் பாதுகாத்து அதைப் பலப்படுத்தி அந்த அடையாளத்தை தொடர்ச்சியாக பேணக் கூடிய வகையிலேயும் அதைப் பேணிக் கொண்டு தமிழ் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமிழ் மக்களின் பொருளாதார பலத்தை பலப்படுத்தவது தான் உண்மையான அபிவிருத்தி.

அதனைவிடுத்து வெறுமனே காசைக் கொண்டடு ஒரு நாளும் அந்த மண்ணில் வாழ்கின்ற மக்களைப் பலப்படுத்தாமல் வெறுமனே அவர்களோடு சம்மந்தப்படுகிற ஒரு சில வசதிகளை மட்டும் சரிப்படுத்துறதாக இருந்தால் அது வெளியில் கூட பொருளாதார பலத்துடன் இருக்கிற தரப்புக்களை சாதகமான அடிப்படை வசதிகைள ஏற்படுத்தப்பட்டிருக்கிற பிரதேசங்களில் தாங்கள் வந்த போட்டி போட்டு முழக்க அதை தங்கட வசப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி நிரலைத் தான் ஏற்படுத்தும்.

இதில் நாங்கள் மிகத் தெளிவு. துமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினைப் பொறுத்தவரையிலெ தமிழ் மக்களுடைய அபிவிருத்தி வேலைத் திட்டம் என்பது சுயாதீனமாக புலம் பெயர் மக்களோடு கைகோர்த்து இந்த அரசு சிங்கள மயப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட போகிற அபிவிருத்திக்கு முகங்கொடுத்து அதில் நின்றுபிடித்து நாங்கள் தொடர்ச்சியாக இந்த மண்ணில் தொடர்ந்தும் நாங்கள் வரக் கூடிய போட்டித் தன்மையை முகங்கொடுத்த அதைத் தாண்டியும் போகக் கூடியது தான் எங்களுடைய பொறுப்பாக இருக்க வேண்டும்.

அது தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்த வைரயில் எங்களுக்கு எங்கள் மக்கள் பலமான அணையை வழங்கினால் நாங்கள் செய்திருக்க கூடிய காரியம். இதை நாங்கள் நிச்சயமாக அடையலாம். புலம்பெயர் தமிழ் மக்கள் கடந்த பல வருடங்களாக அதுவும் ஒரு தன்னிச்சையாக ஒரு ஆயுதப் போராட்டத்தை இந்த வல்லரசுகள் முழுப்பேருமாக சிறிலங்கா அரசிற்கு உதவி செய்த கட்டத்தில் கூட தன்னிச்சையாக அந்தப் போராட்டத்தை தக்கவைத்தவர்கள்.

சிறிலங்கா அரசிற்கு சர்வதேச வல்லரசுகளின் உதவிகள் கொடுக்கப்பட அந்த ஆயுதப் போராட்டத்த புலம்பெயர் உதவிகளுடன் முப்பத்தைந்து வருசத்திற்கு தக்க வைக்கலாம் என்றால் எந்தளவு தூரத்திற:கு தமிழ் மக்களுடைய பொருளதார பலம் இருக்கிறதென்பதை யோசிச்லாம்.

ஊண்மையில் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பொருளாதார பலம் என்பது சிறிலங்கா அரசின் பொருளாதார பலத்தையும் விட பெரியது. அது தான் யதார்த்தம். அது தான் உண்மை. அதற்காகத் தான் அரசு இவ்வளவு தூரத்திற்கு புலம் பெயர்ந்த மக்களைப் பார்த்து பயப்பிடுகிறது.

இந்தத் தீவில் வாழ்கின்ற தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு பலமான தலைமைத்துவத்தைக் கொண்டால் எங்கள் புலம் பெயர் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை பயன்படுத்தி அதனூடாக வடகிழக்கு அபிவிருத்தி எனும் பெயரில் நாங்கள் வரக் கூடிய சிங்கள மயமாக்கலை நாங்கள் முகங்கொடுத்து அதைத் தாண்டியும் வெற்றி கரமாக எங்களுக்கு சாதகமான நிலைக்கு திருப்பலாம். அவ்வாறு திரப்புவதற்குரிய உபாயங்களை தான் முன்னணி பலமான அங்கீகாரம் தமிழ் மக்கள் வழங்கினால் நாங்கள் சாதிப்போம்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post