ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான தமிழர் அரசியல் குறித்து சுமந்திரனின் விளக்க கூட்டம் 29 ஆம் திகதி யாழில் - கலந்து கொள்ளுமாறு அழைப்பு - Yarl Voice ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான தமிழர் அரசியல் குறித்து சுமந்திரனின் விளக்க கூட்டம் 29 ஆம் திகதி யாழில் - கலந்து கொள்ளுமாறு அழைப்பு - Yarl Voice

ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான தமிழர் அரசியல் குறித்து சுமந்திரனின் விளக்க கூட்டம் 29 ஆம் திகதி யாழில் - கலந்து கொள்ளுமாறு அழைப்பு

ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும் எனும் தலைப்பில் புதிய ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான தமிழர் அரசியல் செல்நெறி தொடர்பிபான கலந்துரையாடல் எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண அரசியல் ஆர்வலர் குழாத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இக் கலந்துரையாடலின் போது சிவில் சமூக பிரதிநிதிகளின் விமர்சனங்களிற்கு கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்,ஏ.சுமந்திரன் பதிலளிக்கவுள்ளார்.

இக் கலந்துரையாடலின் நிகழ்ச்சித் தொகுப்பை முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன், வரவேற்புரையை அரசியல் ஆர்வலர் சுப்பையா மோகன்ராஐ;, தொடக்கவுரையை அரசியல் விமர்சன பத்தியாளர் புருஜேhத்தமன் தங்கமயில் ஆகியோர் ஆற்றவுள்ளனர்.

இதே போல விமர்சன உரைகளை பொறியியலாளர் மயில்வாகணம் சூரியசேகரம். முழங்காவில் பங்குத் தந்தை அருட்திரு சி.ஐp. nஐயக்குமார், மூத்த ஊடகவியியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம், யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளர் கே.ரீ.கணேசலிங்கம், அகில இலங்கை கம்பன் கழக ஸ்தாப அமைப்பாளர் கம்பவாரதி இ.nஐயராஐ; ஆகியோர் ஆற்றவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பதிலுரையை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ,சுமந்திரனும் நன்றியுரையை அரசியல் ஆர்வலர் இராஜே;திரன் அணோசன் ஆகியொர் வழங்கவுள்ளனர். இக் கலந்துரையாடலிற்கு அனைவரையும் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.




0/Post a Comment/Comments

Previous Post Next Post