சதந்திர தினத்திற்கு எதிராக யாழில் பறந்த கறுப்புக் கொடிகள் - Yarl Voice சதந்திர தினத்திற்கு எதிராக யாழில் பறந்த கறுப்புக் கொடிகள் - Yarl Voice

சதந்திர தினத்திற்கு எதிராக யாழில் பறந்த கறுப்புக் கொடிகள்

இலங்கையின் 72 வது சுதந்திர தினமான இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால்  கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளது. கறுப்பு கொடிகளுடன் பதாதை ஒன்று கட்டப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து சிறீலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாற்றப்பட்டு அதன் ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தல் வேண்டும்.

கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உள்ளக விசாரணை மூலம் நீதி கிடைக்காது! இவ்வாறு குறிப்பிடப்பட்ட பதாதையோ கட்டப்பட்டுள்ளது.

சுதந்திரதினத்தை கரிநாளாக அறிவித்து வடகிழக்கில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு முழமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதுடன் அந்தப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறும் நேற்றையதினம்  யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post