மின்னியலாளர்களுக்கு தொழில்துறை உரிமம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு யாழில் - Yarl Voice மின்னியலாளர்களுக்கு தொழில்துறை உரிமம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு யாழில் - Yarl Voice

மின்னியலாளர்களுக்கு தொழில்துறை உரிமம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு யாழில்

மின்னியலாளர்களுக்கு உரிமம் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை (சிடா) உட்பட பல அரச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து வழங்கவுள்ளது. மின்சாரத் தொழில்த் துறைக்கான ஒழுங்குறுத்துகை அமைப்பான இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைகுழு இந்த உரிமத் திட்டத்தை செயல்படுத்துவதில் நேரடியாக ஈடுபட்டுள்ளது. 

அந்தவகையில்யாழ்ப்பாண மாவட்ட மின்னியலாளர்களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பான தேசிய விழிப்புணர்வு திட்டம் 2020 பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் அரசாங்க அதிபர் திரு கணபதிப்பிள்ளை மகேசன்  தலைமையில்  நடைப்பெற்றது.

இந்த நிகழ்வுக்காக யாழ். மாவட்டத்திலுள்ள கிட்டத்தட்ட 1450 க்கும் மேற்பட்ட மின்னியலாளர்கள் கலந்துகொண்டார்கள்.

மேலும் இன்று  கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை சார்பில் தேசிய தொழிற் பயிற்சி தகைமைகள் (Nஏஞ) தொடர்பாக உதவிப்பணிப்பாளர் .கே. நிரஞ்சன் தேசிய பயிலுநர் பயிற்சி அதிகாரசபை சார்பில் பயிற்சி பரிசோதகர்  ஆர். திருமுருகன் நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  டி. சுதன் சுகேந்திர மற்றும் இலங்கைப்பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் திரு. எஸ். கிறிஷானந்த் போன்றோர் சமர்ப்பிப்புக்களை செய்தனர். அத்துடன் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.எம்.பிரதீபன் அவர்களும் கலந்துகொண்டார்.

இங்கு உரையாற்றிய  அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்:

இந்த கருத்தரங்கானது நான் யாழ். மாவட்ட  அரசாங்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் பான்கேட்கும் முதலாவது நிகழ்வாக இருக்கிறது. பாதுகாப்பற்ற மின்சார பாவனையால் அதிகளவு மின்சார இறப்புக்கள் ஏற்படுகின்றன. 

உலகநாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் அதிகளவான மின்சார மரணங்கள் நடந்துள்ளன. மின்னியலாளர்கள் தொழில்ரீதியான உரிமத்தை பெறும்போது உள்நாட்டிலும் சர்வதேச நாடுகளிலும் சிறந்த தகுதியான ஒரு மின்னியலாளராக அங்கீகாரம் கிடைக்கும். இந்த கருத்தரங்கு எமது மாவட்டத்தில் நடத்துவதானது காலத்தின் தேவை என தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post