இறுதிவரை விறுவிறுப்பாக நடந்த போட்டியில் இலங்கை திரில் வெற்றி - Yarl Voice இறுதிவரை விறுவிறுப்பாக நடந்த போட்டியில் இலங்கை திரில் வெற்றி - Yarl Voice

இறுதிவரை விறுவிறுப்பாக நடந்த போட்டியில் இலங்கை திரில் வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிஇ தற்போது இலங்கை அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷை ஹோப் சிறப்பான ஆரம்பத்தை வழங்கினார். அந்தவகையில் மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 289 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பாகஇ ஷை ஹோப் 10 பவுண்ட்ரிகள் அடங்கலாக 115 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். அத்துடன்இ ரொஸ்ரன் ஷாஸ் 41 ஓட்டங்களையும்இ பிராவோ 39 ஓட்டங்களையும் கீமோ போல் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாகஇ இசுரு உதான 3 விக்கெட்டுகளையும் நுவான் பிரதீப் மற்றும் திசார பெரேரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 290 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் நிதான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் இலங்கை அணி 49.1 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்து ஒரு விக்கெட்டால் வெற்றியை சுவீகரித்தது.

அணி சார்பாகஇ திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களையும் அவிஸ்க பெர்னாண்டோ 50 ஓட்டங்களையும் குசல் பெரேரா 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். அத்துடன் வனின்டு ஹசரங்க அணியின் வெற்றிக்காக இறுதிவரை களத்தில் நின்று ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் அல்சாரி ஜோசப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு கீமோ போல் மற்றும் ஹெடென் வோல்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அத்துடன் ஜெசன் ஹோல்டர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக வனின்டு ஹசரங்க தெரிவிவுசெய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் தொடரில் 1:0 என்ற நிலையில் இலங்கை அணி முன்னிலையில் உள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post