யாழ். வண்ணார் பண்ணை வர்த்தக நிலையமொன்றில் வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம் - படங்கள் - Yarl Voice யாழ். வண்ணார் பண்ணை வர்த்தக நிலையமொன்றில் வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம் - படங்கள் - Yarl Voice

யாழ். வண்ணார் பண்ணை வர்த்தக நிலையமொன்றில் வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம் - படங்கள்


யாழ் நகரின்  வண்ணார்பண்ணை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்குள் முகங்களை துணியால் மறைத்துக் கட்டிக் கொண்டு உள்நுழைந்த வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக வர்த்தக நிலையத்தில் நின்றிருந்தவர்களை வாளால் அச்சுறுதித்தியதுடன் அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொருக்கி சேதப்படுத்தி அங்கிருந்த பணத்தையும் குறித்த கும்பல் திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் யாழ் வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று இரவு 6 மணியிளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது..

குறித்த வர்த்தக நிலையத்திற்கு இரண்டு மோட்டார் சைக்கில்களில் வாகனத் தகடுகளை வெள்ளைத் துணியால் மறைத்தவாறு வாள்கள் பொல்லுகள் கத்திகளுடன் ஐந்து பேர் சென்றுள்ளனர்.

இதில் இரண்டு மோட்டார் சைக்கில்களிலும் இருவர் நின்றிருந்த நிலையில் மற்றும் ஒருவர் வர்த்தக நிலைய நுழைவாயில் நின்றார். அந்தக் குழுவின் ஏனைய இருவரும் வர்த்தக நிலையத்திற்குள் சென்று குறித்த வர்த்தக நிலையத்தை அடித்து நொருக்கி சேதப்படுத்தினர்.

இதன் போது வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கூக்குரலிட்டு கத்தியுள்ளார். அதே போன்று பொருட்கள் வாங்குவதற்கு வர்த்தக நிலையத்திற்கு வந்திரந்த பொது மக்களும் நின்றிரந்தனர்.

ஆயினும் யாரையும் கத்த வேண்டாம் கத்தினால் வெட்டுவோம் என்று மிரட்டிவிட்டு அங்கிரந்த பொருட்களை அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதன் போது வர்த்தக நிலையத்தில் இருந்த ஒரு தொகைப் பணத்தையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சீசீரீவீ கமராவில் காணொலிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாணப் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொக்குவில் வராகி அம்மன் ஆலயத்தினருகில் நிறுது;தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீதும் அதற்கு அருகிலுள்ள வீடொன்றின் மீதும் வாள்வெட்டுக் கும்பலொன்று தாக்குதல் நடாத்திவட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

இலக்கத்தகடுகளற்ற மோட்டார் சைக்கிலில் வந்த கும்பல் முகங்களை மறை துணியால் மறைத்தவாறு இத் தாக்குதல்களை நடாத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post