பகிடிவதைக்கு எதிராக பெண் அமைப்புக்கள் யாழில் போராட்டம் - Yarl Voice பகிடிவதைக்கு எதிராக பெண் அமைப்புக்கள் யாழில் போராட்டம் - Yarl Voice

பகிடிவதைக்கு எதிராக பெண் அமைப்புக்கள் யாழில் போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கீழ் நோக்கி வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ரீதியான வன்முறைகளுக்கு எதிராக பெண்கள் அமைப்பினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் அமைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பாலியல் வன்முறை மற்றும் பகடி வதைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர்

'மகிழ்ச்சியான பல்கலைக்கழக வாழ்க்கையை மரணத்தில் முடிக்காதே'இ'தற்கொலை சிந்தனையை தூண்டும் பகிடிவதை தேவைதானா'இ'மனிதரை மனிதர் மனிதப்பண்பு தான'இநாட்டிலும் வீட்டிலும் பெண்கள் சமத்துவத்தைப் பேணுவோம் பாலியல் கல்வி என்பது வாழ்க்கை பாடம் தயக்கத்தை விட்டு கற்றுக்கொள்வோம் போன்ற பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தில் உள்ளுராட்சி சபைகளின் பெண் உறுப்பினர்களும் மகளிர் அமைப்புகளும் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post