வெற்றி பெறப் போவது யார்? ரணிலா? சஜித்தா? - கூட்டணி செயலாளர் நியமனத்திலும் தொடர்கிறது இழுபறிப்போர்.. - Yarl Voice வெற்றி பெறப் போவது யார்? ரணிலா? சஜித்தா? - கூட்டணி செயலாளர் நியமனத்திலும் தொடர்கிறது இழுபறிப்போர்.. - Yarl Voice

வெற்றி பெறப் போவது யார்? ரணிலா? சஜித்தா? - கூட்டணி செயலாளர் நியமனத்திலும் தொடர்கிறது இழுபறிப்போர்..

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட கூடாதவர்கள் என்ற பெயர்ப்பட்டியலொன்று சஜித் பிரேமதாசவிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் குறித்த பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் மிகவும் ஆக்ரோஷமான முறையில் செயற்படுவார்கள் என்பதால் அவர்களை குறித்த பதவிக்கு நியமிக்க வேண்டாம் என ரணில் விக்கிரமசிங்க  அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஞ்சித் மத்தும பண்டார  திஸ்ஸ அத்தநாயக்க கபீர் ஹாசிம் அஜித் பீ. பெரேராஇ சுஜீவ சேனசிங்க மற்றும் நலின் பண்டார ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சஜித் பிரேமதசவால் பெயரிடப்படும் நபர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மை உள்ள செயற்குழுவினால் அனுமதியளிக்க வேண்டும்.

இந்த நிலையில் கூட்டணியின் பொதுச்செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post