யாழிலில் வீதியை மறித்து மக்கள் போராட்டம் - மாநகர சபை வழங்கிய உறுதிமொழி - Yarl Voice யாழிலில் வீதியை மறித்து மக்கள் போராட்டம் - மாநகர சபை வழங்கிய உறுதிமொழி - Yarl Voice

யாழிலில் வீதியை மறித்து மக்கள் போராட்டம் - மாநகர சபை வழங்கிய உறுதிமொழி

யாழ்ப்பாணம் காக்கைதீவு அராலி வீதி வசந்தபுரம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்

 யாழ்ப்பாணம் காக்கைதீவு அராலி வீதியில் நீண்டகாலமாக மிருக கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றது இதுவரையில் யாழ்ப்பாண மாநகர சபைக்கு தெரியப்படுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாத அடுத்து ஜே85 வசந்தபுரம்பகுதி மக்கள் இன்றைய தினம் கவனயர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தோடு யாழ்ப்பாணம் மாநகரசபையின் கழிவகற்றும் உழவு இயந்திரங்கள் அனைத்தும் குறித்த போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

 எனினும் அவ்விடத்திற்கு வந்த யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபையின் பொறியியலாளர்கள் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு போடப்பட்ட கழிவுகளை உடனடியாக அகற்றுவதாகவும் அவ்விடத்தில் சட்டவிரோதமாக குப்பை போடுவரை  கைது செய்வதற்காக உடனடியாக கண்காணிப்பு கேமரா பொருத்துவது ஆகவும் உறுதி அளித்ததன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்  அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றதோடு குறித்த நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் செல்ல அனுமதித்தனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post