படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவித்து மீள்குடியேற்ற வேண்டும், இரானுவ தளபதியின் கருத்து ஏற்க முடியாது - வலிவடக்கு மீள்குடியேற்றக்குழு - Yarl Voice படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவித்து மீள்குடியேற்ற வேண்டும், இரானுவ தளபதியின் கருத்து ஏற்க முடியாது - வலிவடக்கு மீள்குடியேற்றக்குழு - Yarl Voice

படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவித்து மீள்குடியேற்ற வேண்டும், இரானுவ தளபதியின் கருத்து ஏற்க முடியாது - வலிவடக்கு மீள்குடியேற்றக்குழு

வலிகாமம் வடக்கிலிருந்த இடம்பெயர்ந்து நீண்டகாலமாக முகாம்களிலுள்ள மக்களின் காணிகளை விடுத்து மீள்குடியமர்வதற்குரிய அனைத்த வசதிகளையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனக் கோரியுள்ள வலிவடக்கு மீள்குடியேற்ற குழு மீள்குடியமர மக்கள் ஆர்வம் இல்லை என்ற இரானுவத் தளபதியின் கருத்தையும் நிராகரித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் வலிவடக்கு மீள்குடியேற்றக் குழுவின் பிரதிநிதிகள் ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தனர். இச் சந்திபில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அக் குழுவின் தலைவர் எஸ்.சஐpவன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

யுத்தத்தின் காரணமாக வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்போதும் முகாம்களிலும் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இரானுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ள அந்த மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டுமென பல்வெறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இவ்வாறான நிலையில் குறிப்பிட்டளவு காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் மீளக் குடியமர்ந்து வருகின்றனர். ஆனால் குடியமர்வதற்கான முழுமையான வசதிகள் இன்னமும் ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலைமையே இருக்கின்றது.

ஆனாலும் மக்கள் பலரும் அந்தக் காணிகளில் குடியமர்ந்துள்ளனர். இவ்வாறான நிலையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் குடியமர்வதில் மக்கள் ஆர்வமமில்லை என யாழ் மாவட்ட இரர்னுவத் தளபதி கூறியிருக்கின்றார். அவருடைய அந்தக் கூற்று ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை. ஏனெனில் தமது சொந்த நிலங்களில் குடியமர்வதில் மக்கள் அக்கறையுடனேயே செயற்பட்டு குடியமர்ந்து வருகின்ற நிலைமையே காணப்படுகிறது.

மேலும் ஏற்கனவே ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. ஆகையினால் அவற்றையும் விடுவித்து மக்களை மிள்குடியமர்த்துமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம்.

எனவே காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளை இந்த பாராளுமன்றம் கலைவதற்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மக்கள் போராடுகின்ற நிலைமையும் காணப்படுகிறது.

ஆகையினால் படையினர் வசமிருக்கும் பொது மக்கள் காணிகளை விடுத்து அவர்களை மிளக் குடியமர்த்தி அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என்றார்.0/Post a Comment/Comments

Previous Post Next Post