வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து பெருமளவு பணம் நகை கொள்ளை - நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணை - Yarl Voice வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து பெருமளவு பணம் நகை கொள்ளை - நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணை - Yarl Voice

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து பெருமளவு பணம் நகை கொள்ளை - நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணை

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் வீடு உடைத்து பெருமளவு பணம் நகை என்பன கொள்ளையடித்த சம்பவமொன்று யாழ்ப்பாணம் நெல்லியடிப் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளதாக நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது..

யுhழ்ப்பாணம் கரவெட்டி நெல்லியடிப் பகுதியிலுள்ள வீடொன்றிற்கு வெளிநாட்டிலிருந்த வந்த உறவினர்கள் தங்கியிரந்துள்ளனர். இவர்கள் இன்றையதினம் அந்த வீட்டை பூட்டிவிட்டு ஆலயத்திற்குச் சென்றுள்ளனர்.

ஆலய வழிபாடகளை மடித்தக் கொண்ட மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு யன்னல்கள் உடைக்கப்பட்டிருப்தை அவதானித்துள்ளனர்.

இதன் போது வீட்டிலிருந்த வெளிநாட்டவர்களின் பணம் மற்றும் நகை என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதில் 20 பவுண் நகை, 1300 யூரோ, 400 ஸ்ரேலிங் பவுண் என வெளிநாட்டுப் பணங்களுமாக மொத்தம் 20 இலட்சத்திற்கு மேல் களவாடப்பட்டுள்ளது.

இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post