குடநாட்டிற்கான குடிநீர் திட்டத்தில் அவதானம் செலுத்த வேண்டும் - ஆளுநரிடம் சிவாஞானம் கோரிக்கை - Yarl Voice குடநாட்டிற்கான குடிநீர் திட்டத்தில் அவதானம் செலுத்த வேண்டும் - ஆளுநரிடம் சிவாஞானம் கோரிக்கை - Yarl Voice

குடநாட்டிற்கான குடிநீர் திட்டத்தில் அவதானம் செலுத்த வேண்டும் - ஆளுநரிடம் சிவாஞானம் கோரிக்கை

யாழ் குடாநாட்டுக்கான குடிநீர்த் திட்டத்iதைநடைமுறைப்படுத்தும் நடவக்கையை துரிதமாக மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் வடக்கின்; புதிய ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.. குடிநீர் விநியோகம்

மேற்படி விடயம் தொடர்பாக தாங்கள் தெரிவித்த கருத்து இன்றைய ஊடாகமொன்றில் காணப்பட்டது.
குடாநாட்டுக்கான குடிநீர் பிரச்சினை கடந்த பல தசாப்தங்களாக கானல் நீராகவே காணப்படுகின்றது. மிகவும் குறிப்பாகஇ யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் தீவகப் பகுதிகள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாக இது இருந்து வருகின்றது.

தங்களால் குறிப்பிடப்படும் கப்பூது வெளி அந்தனன் வெளி குளம் அமைத்தல் தொடர்பாக நாம் விமர்சிக்க விரும்பவில்லை. எனினும்இ கீழ் பாலியாற்று வடிநிலத்திலிருந்து யாழ் குடாநாட்டுக்கான  குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதற்கான திட்டம் தொடர்பாக 04.10.2018 ஆம் திகதிய  வடக்கு மாகாணசபையின் 133 ஆவது அமர்வில் ஓர் முன்மொழிவு எம்மால் முன்வைக்கப்பட்டு  முதலமைச்சரால் வழிமொழியப்பட்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குடிநீர் விநியோகம் தொடர்பாக மாகாண சபை நிறைவேற்றிய ஒரே தீர்மானமும் இதுவே. இந்த விடயம் தொடர்பாக  முன்னை நாள் ஆளுநருக்கு நாம் எழுதிய 22.01.2019ஆம் திகதிய கடிதத்திற்கு (பிரதி இணைக்கப்படுகின்றது) தங்கள் அவதானம் கோரப்படுகின்றது.

எனவே ஏற்கெனவே  சாதகமான பல நடவடிக்கை  எடுக்கப்பட்டு வரும் இத்திட்டத்தை துரிதமாக நிறைவேற்றிவைக்க தொடர் நடவடிக்கை எடுத்துதவுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

இதன் பிரதிகள் வட மாகாணசபை பிரதம செயலாளர் பிரதிப் பிரதம செயலாளர் - பொறியியல் சேவைகள் மாகாணப் பணிப்பாளர் நீர்ப்பாசன திணைக்களம் ஆகியொருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post