சுமந்திரனுக்கு பிறந்தநாள் பரிசு வழங்கிய சிவாஜிலிங்கம் - திருந்த வேண்டுமென்றும் அறிவுரை - Yarl Voice சுமந்திரனுக்கு பிறந்தநாள் பரிசு வழங்கிய சிவாஜிலிங்கம் - திருந்த வேண்டுமென்றும் அறிவுரை - Yarl Voice

சுமந்திரனுக்கு பிறந்தநாள் பரிசு வழங்கிய சிவாஜிலிங்கம் - திருந்த வேண்டுமென்றும் அறிவுரை

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டதனை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் பிறந்தநாள் பரிசாக வழங்க விரும்புகிறோம் என தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் இந்த பரிசினை பெற்றதன் பின்னராவது தன்னை திருத்திக் கொண்டு நடந்து கொள்வார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திலும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள ரில்கோ விருந்தினர் விடுதியில் இன்று இடம் பெற்றது இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த கருத்தினை தெரிவித்த அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமையை உருவாக்கும் முயற்சியில் நாம் கடந்த காலம் தொடக்கம் பல முயற்சிகளை எடுத்து வந்தோம் அந்த முயற்சி இன்று வெற்றி அளித்து உள்ளது நான்கு கட்சிகள் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுல்லது அந்த கட்சிகளில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தலமையிலான தமிழ் மக்கள் கூட்டனி உட்பட ஈபிஆர்எல்எப்இதமிழ் தேசிய கட்சிஇதமிழ் சுயாட்சிக் கழகம்இஆகிய கட்சிகள் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உதயம் ஆகிய இன்றைய தினத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் தனது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார் அவருடைய பிறந்த தினத்திற்கான பரிசாக எமது கூட்டணி உருவாக்கத்தை வலன்குகின்ரோம்

இந்தப் பரிசினை பெற்ற பின்னராவது சுமந்திரன் தன்னை திருத்திக் கொண்டு தமிழ் மக்களுக்காக பயணிப்பார் என எதிர்பார்க்கின்றோம் மேலும் எமது கூட்டணியில் தேசியக் கொள்கையில் இருந்து விலகாத எவரும் எம்முடன் இணைந்து பயணிக்கலாம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

--

0/Post a Comment/Comments

Previous Post Next Post