விடைபெறும் கரு ஐயசூரிய - Yarl Voice விடைபெறும் கரு ஐயசூரிய - Yarl Voice

விடைபெறும் கரு ஐயசூரிய

எதிர்வரும் காலங்களில் தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறி அழைப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றை வழங்கும்படி சபாநாயகர் கரு ஜயசூரிய மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சபாநாயகர் இன்று சனிக்கிழமை பகல் அஸ்கிரிய மற்றும் மல்வதுப்பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேற்படி கூறினார்.

கடந்த 05 வருடங்களில் தாம் ஒருபோதும் புதிய வாகனம் கேட்கவில்லை என்றும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் வாகனத்தையே பாவித்ததாகவும் குறிப்பிட்டார்.

ஜனநாயகத்தை உறுதி செய்த சந்தோஷத்தில் தாம் சபாநாயகர் பதவியில் இருந்து விடை கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post