இராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்து விட்டேன் என்று திருடன் அந்த வீட்டு சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதியது கேரளாவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருவாங்குளம் பகுதியில் பல கடைகளில் திருடிய திருடன் ஒருவன் அங்குள்ள ராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் திருட பூட்டை உடைத்து உள்ளே சென்றிருக்கிறான்.
உள்ளே சென்றதும் அங்குள்ள புகைப்படங்களை பார்த்தான். அதை வைத்து அந்த வீடு ராணுவ வீரருடையது என தெரிந்து கொண்டான்.
இதையடுத்து அங்கு திருடாமல் சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளான்.
அதில் 'இது ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் திருட உள்ளே நுழைந்து விட்டேன். பைபிளின் ஏழாவது கட்டளையை மீறிவிட்டேன். ராணுவ அதிகாரி அவர்களேஇ என்னை மன்னித்து விடுங்கள்' என குறிப்பிட்டுள்ளான்.
தகவலறிந்து கேரள போலீசார் அந்த திருடனைப் பிடிக்க விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment