ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் முன்னணி வீரர் - Yarl Voice ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் முன்னணி வீரர் - Yarl Voice

ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் முன்னணி வீரர்

ஜாப்ரா ஆர்சரின் முழங்கையில் முறிவு ஏற்பட்டுள்ளதால் இலங்கை தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சர். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது ஆர்சரின் வலது கை முழங்கையில் காயம் ஏற்பட்டது.

வலி அதிகமாக இருக்க 2-வது டெஸ்டில் விளையாடவில்லை. தொடர்ந்து வலி இருந்ததால் 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் விளையாடவில்லை. மேலும் டி20 தொடரில் இருந்து விலகி சொந்த நாடு திரும்பினார்.

இந்நிலையில் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது முழங்கையில் முறிவு மிகப்பெரிய அளவில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் இலங்கை தொடர்இ ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

மேலும்இ அணி டாக்டர்களுடன் இணைந்து காயம் குணமடைந்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயாராகுவதற்கான பணியில் ஈடுபடுவார். ஜூன் மாதம் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தயாராகுவார் என்று தெரிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ஏலம் எடுத்துள்ளது. அவர் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post